For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூத்துக் குலுங்கும் சூரியகாந்திப் பூக்கள்- அமோக விளைச்சலால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: எட்டயபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சூரியகாந்தி பூ அதிகமாக விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பருவ மழை தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய அளவு பெய்யவில்லை. இந்த நிலங்களில் பயிரிடப்பட்ட சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Sunflowers ready to harvest in Tuticorin

அரசு நஷ்ட ஈடு கொடுக்காததால் இந்த வருடம் என்ன செய்வது என திகைத்து போய் இருந்தனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் அவர்கள் பாசனம் செய்ய விவசாய பணிகளை மேற்கொண்டனர்.

ஆனால் போதிய அளவு பெய்த பின்னரும் விடாது பெய்ததால் மருந்து தெளிக்க முடியவில்லை. மேலும் களை எடுக்கவும் முடியவில்லை. இதன் காரணமாக இந்தாண்டும் நஷ்டம் ஏற்படுமோ என்ற அசசத்தில் விவசாயிகள் இருந்தனர். விவசாயிகள் யோசனையில் சூரியகாந்தி பூவை பயிரிட்டனர்.

இந்த விதையை எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். பருவம் ஓரு பொருட்டல்ல என்பதால் அதை விதைத்தனர். குறைந்தது கொஞ்சம் மழை பெய்தால் கூட போதும்.

இந்த நிலையில் இந்த வருடம் பயிரிடப்பட்ட சூரியகாந்தி பூ நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனை அறுவடை செய்து விற்பனை செய்ய விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். எப்படியும் அதை நல்ல விலைக்கு விற்காமல் விடப்போவதில்லை என பெரும்பாலான விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Sunflowers ready to harvest in Tuticorin district. This time sunflower crop will grown heavily; farmers in full of happiness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X