For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பானின் டொகோமோவுக்கு டாடா சன்ஸ் ரூ.7,950 கோடி இழப்பீடு வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: ஜப்பானை சேர்ந்த டொகோமோ நிறுவனத்துக்கு டாடா சன்ஸ் ரூ.7,950 கோடி இழப்பீடு வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த டாடாவும், ஜப்பானை சேர்ந்த டொகோமோ நிறுவனமும் கூட்டு சேர்ந்து டாடா டொகோமோ என்னும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை 2008-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கின. கடந்த 2014-ம் ஆண்டு இக் கூட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேற டொகோமோ முடிவெடுத்தது.

Tata Sons ordered to pay $1.17 billion to Japan's NTT DoCoMo for breaching agreement

மேலும் ஒப்பந்தத்தின்படி டாடா டொகோமோ நிறுவனத்தில் உள்ள டொகோமோ பங்குகளை விற்பதற்கு டாடா ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் டாடா அதனை செய்யவில்லை.

இதனால் கடந்த ஆண்டு லண்டனில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் டாடாவுக்கு எதிராக டொகோமோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டொகோமோ நிறுவனத்தின் பங்கு 26.5%. இதனை ரூ.13,070 கோடிக்கு பங்குகளை வாங்கியது. இப்போது இதில் 50% தொகை இழப்பீடாக வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது.

டொகோமோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ள டாடா சன்ஸ் முன்வந்தது. இதற் காக ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An international arbitration court has ordered Tata Sons to pay $1.17 billion (nearly Rs 7,956 crore) to NTT DoCoMo for breach of contract on the grounds that the Indian group neither found a buyer nor bought back the Japanese partner's 26% stake in their telecom joint venture Tata Teleservices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X