For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சைரஸ் மிஸ்ட்ரிக்கு நோட்டீஸ் அனுப்பிய டாடா சன்ஸ்- ரகசியத்தை சொல்லிட்டாராம்

சைரஸ் மிஸ்ட்ரி கம்பெனி ரகசியங்களை காக்க தவறிவிட்டார் என்று கூறி அவருக்கு எதிராக டாடா சன்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

By Super Admin
Google Oneindia Tamil News

மும்பை: டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்ட்ரிக்கு எதிராக டாடா சன்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டாடா குழும தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரி கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதியன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கான உரிய விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை என சைரஸ் மிஸ்ட்ரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

Tata Sons slaps legal notice on Mistry

சைரஸ் மிஸ்ட்ரி லாபம் ஈட்டக்கூடிய வர்த்தகப் பணிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், இதனால் ரத்தன் டாடா போன்றோர் அதிருப்தி அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்தே, அவரை பதவி நீக்கம் செய்து "டாட்டா" காட்டியதாக கூறப்பட்டது.

சைரஸ் மிஸ்ட்ரி நீக்கத்தை தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக, அடுத்த 4 மாதங்களுக்கு ரத்தன் டாடா செயல்படுவார் என்றும் கூறப்பட்டது. மேலும், டாடா சன்ஸ் நிர்வாகக் குழு, புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஒரு தேர்வு குழுவையும் அமைத்துள்ளது.

சைரஸ் மிஸ்ட்ரியை, டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கும் பொருட்டு, வழக்கத்திற்கு மாறாக ஏராளாமான பொதுக்குழுக் கூட்டங்கள் அந்தந்த நிறுவனங்களில் நடைபெற்று வந்ததாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து நீங்கள் என்ன என்னை நீக்குவது, நானே ராஜினாமா செய்கிறேன் என்று டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களிலும் தான் வகித்த பதவிகளை ராஜினாமா செய்தார் சைரஸ் மிஸ்ட்ரி, மேலும் டாடா குழுமத்துக்கு எதிரான போரை அடுத்தகட்டமாக பெரிய அளவிற்கு எடுத்துச் செல்லவிருப்பதாக தெரிவித்தார்

எந்தவித விளக்கமும் இன்றி தான் நீக்கப்பட்டதை எதிர்த்து டாடா சன்ஸ் நிறுவனத்தின் மீது, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார் சைரஸ் மிஸ்ட்ரி. இது டாடா சன்ஸ் நிறுவனத்தை மேலும் கடுப்பாக்கியுள்ளது. சைரஸ் மிஸ்ட்ரிக்கு எதிராக டாடா சன்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில், சைரஸ் மிஸ்ட்ரி அளித்துள்ள மனுவில், நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டங்கள், நிதி தகவல்கள் உள்ளிட்ட ரகசிய தரவுகளை வேண்டுமென்றே குறிப்பிட்டுள்ளார். இது ரகசியத் தன்மையை மீறும் செயல் என கூறப்பட்டுள்ளது.

இயக்குனராக ரகசியத் தன்மையை மீறும் செயலை மட்டும் சைரஸ் மிஸ்ட்ரி செய்யவில்லை. டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு தீங்கு மற்றும் இழப்பு ஏற்படுத்தும் ஒரே நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளார் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tata Sons slaps legal notice on Mistry for alleged confidentiality breach
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X