For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் சூட்கேஸ் பாரம்பரியம்.... சில சுவாரஸ்ய தகவல்கள்

பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது நிதியமைச்சர் தனது கையில் ஒரு சின்னதாய் ஒரு சூட்கேஸ் வைத்துக்கொண்டு அதை காட்டி போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பார். அதன் பின்னணியில் சில சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் மத்திய பொது பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் நாளை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்

பட்ஜெட் என்ற சொல், பிரெஞ்ச் மொழியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பவ்கெட் என்ற பிரெஞ்ச் வார்த்தைக்கு தோல் பை என்று பொருள். அந்த சொல்லில் இருந்து தான், பட்ஜெட் என்ற வார்த்தை தோன்றியதாக கூறப்படுகிறது.

மச்சி ஓப்பன் தி பாட்டில்னு மங்காத்தா பாட்டுக்கு ஆரம்ப வரியை கேட்டிருப்போம். ஓபன் தி பட்ஜெட் என்று 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் நிதியமைச்சர் தனது உதவியாளரிடம் கூறினாராம். அதுவே அந்த வார்த்தையின் தொடக்கமாக மாறிவிட்டது என்பது வரலாறு.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, லண்டனின் நாடாளுமன்ற கட்டடம் முன்பாக சிவப்பு நிற சூட்கேசை நிதி அமைச்சர்கள் நாலாபுறமும் காட்டியபடி புன்னகைத்து போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கமான நடைமுறை. அதில் நிதியமைச்சர் வாசிக்கப் போகும் பட்ஜெட் பற்றிய அச்சடித்த காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

சிவப்பு பிரிப்கேஸ்

சிவப்பு பிரிப்கேஸ்

1860 ஆம் ஆண்டு, பட்ஜெட் தாக்கல் செய்த வில்லியம் க்ளேண்டோன், பிரிட்டன் ராணியின் உருவம் பதித்த சிவப்பு நிற சூட்கேசை பயன்படுத்தினார். நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு, அனைவருக்கும் தெரியும் வகையில் அந்த பெட்டியை காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பாரம்பரிய வழக்கம்

பாரம்பரிய வழக்கம்

இந்த நடைமுறையையே நமது நாட்டிலும் பின்பற்றத் தொடங்கினர். இப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது மத்திய, மாநில நிதியமைச்சர்கள் இதை பாரம்பரியமாக பின்பற்றுகின்றனர்.

பட்ஜெட் போட்டோக்கள்

பட்ஜெட் போட்டோக்கள்

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் முதன்முறையா 1947 ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அப்போதைய நிதி அமைச்சர் சண்முகம் செட்டியார், முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனது கையில் கொண்டு வந்த தோல் பையை வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். 1991ஆம் ஆண்டு அப்போதய நிதியமைச்சர் மன்மோகன் சிங் கறுப்பு நிற பெட்டியை எடுத்து வந்தார். 1998 -99 ஆம் ஆண்டு அப்போதய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா கறுப்பு நிற சிறிய பக்கிள்கள் கொண்ட பையை எடுத்து வந்து போஸ் கொடுத்தார்.

பிரணாப் முகர்ஜி - ப.சிதம்பரம்

பிரணாப் முகர்ஜி - ப.சிதம்பரம்

தற்போதய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சராக இருந்த போது சிவப்பு நிற பெட்டியை எடுத்து வந்த போஸ் கொடுத்தார். அது பிரிட்டனின் சிவப்பு நிற சூட்கேஸ் போல இருந்தது. ப. சிதம்பரம் பட்ஜெட்டின் போது அடர் சிவப்பு நிற பெட்டி, ப்ரவுன் நிற பெட்டியை எடுத்து வந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பார்.

அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பின்னர் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஜெட்லி, கறுப்பு நிற சூட்கேஸ் எடுத்து வந்தார். பின்னர் லேசான ஆரஞ்ச் வண்ணமாக மாறியது. இந்த முறை அவர் எடுத்து வரும் சூட்கேஸ் நிறத்தை விட அவர் தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா படம்

ஜெயலலிதா படம்

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட சூட்கேஸ் காட்டி புன்னகைப்பார் நிதியமைச்சரும், முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம்.

பிரிட்டனின் சிவப்பு நிற சூட்கேசுக்கு பதிலாக ஆண்டுக்கு ஆண்டு வண்ணங்கள் மாறினாலும், பட்ஜெட் பாரம்பரியம் போட்டோவிற்கு போஸ் கொடுப்பது தொடரவே செய்கிறது.

English summary
Budget originates from a French word 'bougette' which means a leather bag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X