For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவிலேயே வாழைப்பழ உற்பத்தியில் நம்பர் 1 யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    வாழைப்பழ உற்பத்தியில் நம்பர் 1 யார் தெரியுமா?

    சென்னை: ஆண்டுக்கு 5136 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. முக்கனிகளில் வாழைக்கு 3வது இடம் கொடுத்திருந்தாலும் விலை குறைவான இந்த பழங்களை சாப்பிட அனைவருமே ஆர்வம் காட்டுகின்றனர்.

    உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம். வாழைப்பழம் சத்துக்கள் அதிகம் கொண்ட எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய ஒரு உணவு. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

    மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருக்கிறது. இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்க உதவுகிறது. விளையாட்டு வீரர்கள் வாழைப்பழத்தை அதிகம் உட்கொள்கின்றனர்.

    வாழைப்பழம் உற்பத்தியில் உலகளவில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இன்று இந்தியா வளர்ந்துள்ளது. 2014ம் ஆண்டு எந்த ஒரு நாடும் உற்பத்தி செய்யாத அளவிற்கு இந்தியா உற்பத்தி செய்து சாதனைப் படைத்தது.

    தமிழ்நாடு முதலிடம்

    தமிழ்நாடு முதலிடம்

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பழங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்காக வாழைப்பழம் உள்ளது. தமிழ்நாடு-14.2 சதவிகிதம் , குஜராத் - 13.8 சதவிகிதம், ஆந்திர பிரதேசம் - 13.4 சதவிகிதம் என மூன்று மாநிலங்கள் மட்டும் இந்தியாவின் மொத்த வாழைப்பழம் உற்பத்தியில் 40 சதவீதத்தைப் பிடித்துள்ளன. மேலே கூறிய மூன்று மாநிலங்களைத் தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்தும் சேர்த்து 58.6 சதவீதம் வரை வாழைப்பழம் உற்பத்தியை அளிக்கின்றன.

    கேரளாவில் உற்பத்தி பாதிப்பு

    கேரளாவில் உற்பத்தி பாதிப்பு

    வாழைப்பழ உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்து வந்த கேரளா கடந்த 2016ஆம் ஆண்டு ஆண்டுப் பெய்ய வேண்டிய இரண்டு பருவமழையும் ஏமாற்றியதால் ஆறு, ஏரிகள், குளங்கள் அனைத்தும் வறண்டு போய்க் குடி நீருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே வாழைப்பழம் உற்பத்தி குறைந்து போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    வாழைப்பழம் உற்பத்தி

    வாழைப்பழம் உற்பத்தி

    நாடு முழுவதும் 10 மாநிலங்களில் வாழைப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 5136 மெட்ரிக் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வாழைப்பழம் மட்டுமல்லாது இலை, பூ, காய், தண்டு, நார் என வாழையின் அனைத்து பொருட்களும் உபயோகப்படுகிறது. கதலி, கற்பூரவல்லி, பூவன், பேயன் என பலவகை வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    கர்நாடகாவில் வாழைப்பழம்

    கர்நாடகாவில் வாழைப்பழம்

    ஒடிஷாவில் 521.31 மெட்ரிக் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் 837.21 மெட்ரிக் டன் பழங்களும், மேற்கு வங்கத்தில் 1077.8 மெட்ரிக் டன் பழங்களும் உற்பத்தியாகின்றன. மத்திய பிரதேசத்தில் 1701 மெட்ரிக் டன் வாழையும், பீகாரில் 1702 மெட்ரிக் டன் வாழைப்பழமும் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் 2529.6 டன் பழங்கள் உற்பத்தியாகின்றன.

    இந்தியாவில் 4வது இடம்

    இந்தியாவில் 4வது இடம்

    இந்திய அளவில் வாழைப்பழ உற்பத்தியில் ஆந்திரா 4வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு ஆண்டு ஒன்றுக்கு 3242.8 மெட்ரிக் டன் பழங்கள் உற்பத்தியாகின்றன. கிழக்கு கோதாவரி மாவட்டம் பழ உற்பத்திற்கு ஏற்ற பகுதி. இங்கு விளைவிக்கப்படும் பழங்கள் பிரசித்தி பெற்றவை. மகாராஷ்டிராவில் 3600 மெட்ரிக் டன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சத்தான வாழைப்பழங்கள்

    சத்தான வாழைப்பழங்கள்

    வாழைப்பழ உற்பத்தியில் குஜராத் இந்திய அளவில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அங்கு 4523 மெட்ரிக் டன்

    பழங்கள் உற்பத்தியாகின்றன. மேற்குப்பகுதியில் வாழைப்பழங்கள் அதிகம் விளைகின்றன. தமிழகத்தில் வாழைப்பழங்கள் தென் மாவட்டங்களில் அதிகம் விளைகின்றன. நம்பர் ஒன் இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. வாழை இலையில் உணவு போட்டு சாப்பிடுவதன் மூலம் எளிதில் ஜீரணமாகும். இந்தியாவில் உள்ள மண்வளமும், சீதோஷ்ண நிலையில் வாழை உற்பத்தியில் முதன்மையாக திகழ முக்கிய பங்கு வகிக்கிறது.

    English summary
    India ranks at number 1 slot in the world’s highest Banana producing country. Banana which is an edible fruit is majorly grown in sub-tropical and warm climatic conditions. At number one slot, we have Tamil Nadu, with the production of 5136 metric tonnes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X