For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கமாக மாறும் கேரட், தகதகக்கும் பாகற்காய் - பருவமழையால் விலை விர்ர்...

தென்மேற்குப் பருவமழை தொடங்கி காய்கறிகள் விதைக்கப்பட்டு வருவதால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கோடைக்காலம் தொடங்கியது முதலே காய்கறிகளின் விலை இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பருவமழையும் தொடங்கி விட்டதால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் சென்னை கோயம்பேடு சந்தைக்குக் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கோடைக்காலத்தை முன்னிட்டுப் போதிய மழையின்மையால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்து அவற்றின் வரத்து சென்னை கோயம்பேடு சந்தையில் குறைந்துள்ளது.

Vegetable prices rise

டந்த 6 மாதங்களுக்கும் மேலாக காய்கறிகள் விலைகள் வீழ்ச்சியடைந்திருந்தன. இந்த நிலையில் இப்போது விலை உயரத்தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் காய்கறிகளின் வரத்து குறைவினால் பாகற்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால், காய்கறிகள் அறுவடை முடிந்து, நடவுப் பருவம் தொடங்கியுள்ளது. அதனால் சில காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் வரை காய்கறிகளின் விலை உயர்வு இருக்கும் என மொத்த விற்பனை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காய்கறிகள் விலை நிலவரம்:

ஒரு கிலோ பாகற்காய் விலை ரூ.25லிருந்து ரூ.35 ஆகவும், கேரட் விலை ரூ.18லிருந்து ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது. சாம்பார் வெங்காயத்தின் விலை ரூ.33 ஆகவும், கத்திரிக்காய் விலை ரூ.20 ஆகவும், முள்ளங்கி ரூ.20க்கும், பீன்ஸ் ரூ.55க்கும், புடலங்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. 14 ரூபாய்க்கு வெங்காயமும், 15 ரூபாய்க்குத் தக்காளியும், 20 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கும், 15 ரூபாய்க்கும் வெண்டைக்காயும், 6 ரூபாய்க்கு முட்டைக்கோசும், 23 ரூபாய்க்கு பீட்ரூட்டும், 23 ரூபாய்க்கு முருங்கைக்காயும் கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. கத்தரிக்காய் ரூ.20, தக்காளி ரூ.16, வெண்டைக்காய் ரூ.20, பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.40, முள்ளங்கி ரூ.25, இஞ்சி ரூ.80, அவரைக்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

.

English summary
Prices of vegetables both in the whole sale and retail markets have seen a sharp increase in the last couple of days. Traders said reduced production and high demand were the reasons for the increase in prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X