For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா செய்வது சரியில்லை.. அமெரிக்க ஆளுநர்கள் கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர்கள் கூட்டத்தில் இந்தியாவை கடிந்துகொண்ட ட்ரம்ப்- வீடியோ

    வாஷிங்டன்: இந்தியா நடந்து கொள்வது சரியில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின், 'ஹார்லி டேவிட்சன்' பைக்கை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய, இந்தியா வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் பைக்குகள் அமெரிக்காவில் வரி இன்றி இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இரண்டாவது முறை

    இரண்டாவது முறை

    நியாயமான வர்த்தகத்தை மேற்கொள்ளவே அமெரிக்கா விரும்புவதாகவும், இந்தியா மாறுபட்டு நடப்பதாகவும் ட்ரம்ப் இன்று குற்றம்சாட்டியுள்ளார். சில தினங்கள் முன்பு இதேபோன்ற ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், மீண்டும் அதே விஷயத்தை கிளப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மாநில ஆளுநர்களுடனான ஆலோசனையின்போது ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்கா பல நாடுகளுடன் கொண்டுள்ள வர்த்தக உடன்பாடுகளை குறிப்பிட்டு பேசும்போது ஒரு உதாரணமாக ஹார்லி டேவிட்சன் பைக் விவகாரத்தை அவர் கிளப்பியுள்ளார்.

    ஹார்லி டேவிட்சன்

    ஹார்லி டேவிட்சன்

    "ஒரு உதாரணத்திற்காக இதை கூறுகிறேன். ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இந்தியாவுக்கு அனுப்பும்போது 100 சதவீத சுங்க வரி செலுத்த வேண்டியிருந்தது. பிறகு யாரை நான் பிரமாதமானவர் என நினைக்கிறோனோ அந்த பிரதமர் (மோடி) எனக்கு போன் செய்து, நாங்கள் சுங்க வரியை 50 சதவீதமாக குறைத்துவிட்டோம் என்று தெரிவித்தார். ஆனால், இதனால் அமெரிக்காவுக்கு பிரயோஜனம் இல்லை" என்று ட்ரம்ப் தெரிவித்தார். அப்போது மோடியை போலவே பேசிக்காட்டியுள்ளார்.

    உபகாரம் செய்யவில்லை

    உபகாரம் செய்யவில்லை

    "அவர் ஒரு நல்ல மனிதர் (மீண்டும் மோடியை குறிப்பிட்டு), "நாங்கள் 75 சதவீதமாக வரியை குறைத்தோம்.இப்போது 50 சதவீதத்திற்கு குறைத்துள்ளோம்" என்று என்னிடம் தெரிவித்தார். நான் பதிலுக்கு, ஹும் என்று தெரிவித்தேன். அவர்கள் ஏதோ நமக்கு உபகாரம் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல" இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார். 800 சிசிக்கும் மேல் சக்தியுள்ள பைக்குகளை இந்தியாவில், இறக்குமதி செய்யும்போது சுங்கவரியாக 100 சதவீதம் விதிக்கப்பட்டது. பின்னர் அது, 50 விழுக்காடாக குறைக்கப்பட்டதை மோடி ட்ரம்ப்பிடம் தெரிவித்ததை ட்ரம்ப் இவ்வாறு மறைமுகமாக கூறியுள்ளார்.

    இந்திய பைக்குகளுக்கு வரி இல்லை

    இந்திய பைக்குகளுக்கு வரி இல்லை

    ட்ரம்ப் மேலும் கூறுகையில், இப்படி அவர் கூறியதை கேட்ட பிறகு நான் த்ரில் அடையத்தான் வேண்டும். இது அமெரிக்க மக்களுக்கு நல்ல சேதி இல்லை. அதிலும், ஆளுநர்களான உங்களுக்கு. இதுபோலத்தான் அமெரிக்கா நிறைய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. அந்த நாட்டில் இருந்து (இந்தியா) அமெரிக்காவிற்குள் நிறைய மோட்டார் பைக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் வரி இல்லை. நமக்கு ஜீரோதான் கிடைக்கிறது. அவர்களுக்கு 100 சதவீதம் கிடைக்கிறது.

    கம்பெனியே பேசுவதில்லை

    கம்பெனியே பேசுவதில்லை

    ஹார்லி டேவிட்சன் ஒரு நல்ல நிறுவனம். அந்த நிறுவன சேர்மேன் அல்லது தலைவரிடம் நான் பேசியபோதெல்லாம், அவர்கள் இதை என்னிடம் குறிப்பிட்டு பேசியது கிடையாது. இதை பற்றி நான் பேசுவதுதான் அவர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. அவர்களை விட நான்தான் இந்த விஷயத்தை அதிகம் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தியா செய்யும் இதுபோன்ற வர்த்தகம் சரியானது கிடையாது. இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

    English summary
    "Harley Davidson sends motorcycles to India, they have to pay 100% tax. When I spoke to PM (Modi) he said we are lowering it to 50% but so far we are getting nothing. He gets 50%, he thinks, he is doing us a favour, but that is not a favour", says Donald Trump
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X