For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள 831 பேர் - ஆய்வு

இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்போரின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 831 பேர் வைத்திருக்கும் 52 லட்சம் கோடி ரூபாய், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் கால் பாகத்தை விட அதிகம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள பார்க்லேஸ் ஹூரன் ஆய்வறிக்கையில், 2018ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 831 பேர் ரூ.1000 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 லட்சம் கோடியாகும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்கைக் காட்டிலும் அதிகமாகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் 214 பேர் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். இந்தியாவில் ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Wealth of richest 831 Indians equal to quarter of GDP Report

2017ஆம் ஆண்டில் 214 பேர் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து வைத்திருந்ததாகவும், இது தற்போது 831-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் சராசரி வயது 60. இவர்களில் 136 பேர் பெண்கள்.

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியைக் கொண்ட மும்பை தான் பணக்காரர்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது. இங்குள்ள 233 பேர் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 163 பேரும், பெங்களூருவில் 70 பேரும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளனர்.

மருந்துவத்துறையில் 13.7 சதவிகிதம் பேரும், மென்பொருள் மற்றும் சேவைத்துறையில் 7.9 சதவிகிதம் பேரும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர். 2018ஆம் ஆண்டில் 9 பேரின் சொத்து மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதில் கிரஃபைட் இந்தியாவின் கிருஷ்ண பங்கூரின் சொத்து மதிப்பு 430 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், உலக பொருளாதார மன்றத்தில் அறிக்கை அளித்த ஆக்ஸ்ஃபம் என்ற நிறுவனம் இந்தியாவில் 73 சதவிகித சொத்துக்கள் ஒரே ஒரு சதவிகிதம் பேரிடம் மட்டுமே உள்ளதாக கவலை தெரிவித்துள்ளது அந்த நிறுவனம். உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்கள் அடைந்த நன்மைகள் தொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்பார்ம் என்ற தனியார் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டது.

இதன்படி கடந்த 2017ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான ஒட்டுமொத்த சொத்துக்களில் 82 சதவிகிதம், வெறும் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் போய்ச் சேர்ந்திருப்பதும், குறிப்பாக இந்தியாவில் உருவான மொத்த சொத்துக்களில் 73 சதவிகிதத்தை, ஒரு சதவிகித கோடீஸ்வரர்களே பங்கு போட்டுக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதாவது இந்தியாவில் 1 சதவிகித பணக்காரர்கள் பங்குபோட்டுக் கொண்ட சொத்து மதிப்பு 20 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது, மத்திய அரசின் 2017-18 பட்ஜெட்டிற்கு நிகரான தொகை என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 58 சதவிகிதமாக அதிகரித்துள்ளதையும் ஆக்ஸ்பார்ம் நிறுவனத்தின் ஆய்வு அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
At a time when policymakers are grappling on how to reduce The number of Rs 1,000 crore-plus wealthy Indians have nearly doubled in the past two years - from 339 in 2016 to 831 in 2018,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X