For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகம் பூராவும் பெட்ரோல் விலை ஏறுதாம்

உலகிலேயே ஐஸ்லாந்தில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. ஜூன் 5 ஆம் தேதியின் படி ஐஸ்லாந்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 143.82 ரூபாயாக உள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.138.32 ஆக உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 81 ரூபாய்க்கு மேல் உயர்ந்து வருகிறது. டீசல் விலை ஒரு லிட்டர் 74 ரூபாயை எட்டப்போகிறது.

worldwide petrol price list


பல்வேறு நாடுகளில் பெட்ரோல் விலை இந்தியாவை விட குறைவாக விற்கப்படுகின்றன. அதேசமயத்தில் சில நாடுகளில் பெட்ரோல் விலை அதிகமாகவும் விற்கப்படுகின்றன. பெட்ரோலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் விலை குறைவாகவும் பெட்ரோலை ஏற்றுமதி செய்யாத நாடுகளில் விலை அதிகமாகவும் உள்ளது. தற்போது இந்தியாவை விட அதிகம் விலைக்கு பெட்ரோல் நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவை விட சுமார் 8 நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. பல நாடுகளில் பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

உலகிலேயே ஐஸ்லாந்தில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. ஜூன் 5 ஆம் தேதியின் படி ஐஸ்லாந்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 143.82 ரூபாயாக உள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.138.32 ஆக உள்ளது. ஐஸ்லாந்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஹாங்காங் உள்ளது. ஹாங்காங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 141.79 ரூபாயாக உள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 116.24 ஆக உள்ளது. பெட்ரோல் விலை அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நார்வேயும் நான்காவது இடத்தில் நெதர்லாந்தும் உள்ளன. நார்வேயில் பெட்ரோல் விலை 137.40 ரூபாயாகவும் உள்ளது.

ஜப்பானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 90.53 ஆக உள்ளது. இந்தோனேசியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 44.76 ஆக உள்ளது. இந்தியாவில் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை விரைவில் 100 ரூபாயை எட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
Comparison of Retail petrol/ gasoline prices across the world with India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X