For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் அக்டோபரில் 5.28 சதவிகிதமாக உயர்வு!

செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது நாட்டின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: அக்டோபர் மாதத்தில் மொத்த விலைகள் அடிப்படையில் பணவீக்கம் 5.28 சதவீதமாக அதிகரித்தது. ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக உயர்ந்தது.

கச்சா, இயற்கை எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்தியாவின் அக்டோபர் மாதத்துக்கான மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் குறித்த விவரங்களை நவம்பர் 14ஆம் தேதி மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

WPI inflation rises to 5.28% in October

அதன்படி, செப்டம்பர் மாதத்தில் 120.8 புள்ளிகளாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 121.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது 0.7 சதவிகிதம் கூடுதலாகும்.

மொத்தவிலை பணவீக்கம் உயர்வு

மாதாந்திர மொத்த விற்பனை விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திரப் பணவீக்க விகிதம் 5.28 சதவிகிதமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறியீடு 4.1 சதவிகிதம் உயர்ந்தது. இயற்கை எரிவாயு முந்தைய மாதத்தில் 95.9 லிருந்து 99.8 ஆக உயர்ந்துள்ளது.

எரிபொருள் மற்றும் சக்திக்கான குறியீட்டு எண் முந்தைய மாதத்தில் 107.2 லிருந்து 111.1 ஆக 3.6 சதவீதம் உயர்ந்து உள்ளது. நிலக்கரி குறியீட்டு எண் விலை 0.2 சதவிகிதம் உயர்ந்தது.உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான குறியீட்டு எண் முந்தைய மாதத்தில் 129.4லிருந்து 129.5 ஆக 0.1 சதவிகிதம் உயர்ந்தது.

உணவுப் பொருட்களின் பணவீக்கம் 0.9 சதவிகிதம் உயர்ந்து 145.8 புள்ளிகளாக இருக்கிறது. இதில் கோழிக் கறியின் விலை 4 சதவிகிதமும், உளுத்தம் பருப்பு மற்றும் சோளத்தின் விலை 4 சதவிகிதமும், காய்கறிகள் மற்றும் முட்டை விலை 3 சதவிகிதமும், கோதுமை, மாட்டிறைச்சி, எருமை இறைச்சி, ராகி ஆகியவற்றின் விலை 1 சதவிகிதமும் உயர்ந்திருந்தது.

அதே நேரத்தில் நறுமணப் பொருட்கள், பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை 1 சதவிகிதமும் தேயிலை, மீன் மற்றும் கடல் உணவுகளின் விலை 2 சதவிகிதமும், வெற்றிலை விலை 3 சதவிகிதமும் குறைந்துள்ளது. கனிமங்களின் பணவீக்கம் 4.3 சதவிகிதம் சரிந்து 129.4 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் (WPI) பணவீக்கம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக இருந்தது அக்டோபரில் 3.68 சதவீதமாக இருந்தது.

சில்லறை பணவீக்கம் சரிவு

நாட்டின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் 3.31 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் உணவு பணவீக்கம் குறைந்து விட்டதால் சில்லறை பணவீக்கம் குறைந்து விட்டது. உணவு மற்றும் எரிபொருள் செலவுகள் குறைந்துவிட்டதால், தொடர்ந்து மூன்றாவது மாதமாக மத்திய வங்கியின் நடுத்தர கால இலக்குகளை விட குறைவானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The wholesale price inflation for the month of October came in at a four-month high of 5.28 percent compared to 5.13 per cent in September, data released by the Commerce and Industry ministry said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X