For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எரிபொருட்கள், காய்கறி விலையேற்றம் எதிரொலி- நாட்டின் மொத்த பணவீக்க விகிதம் 5.77% ஆக உயர்வு

பணவீக்க விகிதமானது 5.77% ஆக அதிகரித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் மொத்த பணவீக்க விகிதமானது ஜூன் மாதத்தில் 5.77% ஆக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 4.43% ஆக பணவீக்க விகிதம் இருந்தது.

பொருட்களின் விலை உயர்வு அடிப்படையில் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது. உணவுப் பொருட்களின் பணவீக்கமானது 1.60%-ல் இருந்து 1.80% ஆக அதிகரித்துள்ளது.

WPI inflation rises to 5.77 per cent in June on costlier veggies, fuel

காய்கறிகளின் சார்ந்த பணவீக்க விகிதம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. மே மாதத்தில் 2.51% ஆக இருந்தது ஜூனில் 8.12% ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் எரிபொருட்கள், மின்சாரம் சார்ந்த பணவீக்க விகிதமும் 11.22%-ல் இருந்து 16.8% ஆக உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கின் பணவீக்க விகிதமானது 81.93%ல் இருந்து 99.02%; வெங்காயத்தின் பணவீக்க விகிதம் 13.20%-ல் இருந்து 18.25% ஆக அதிகரித்திருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 2013 டிசம்பருக்குப் பின் பணவீக்க விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Inflation based on wholesale prices shot up to 5.77 per cent in June on increasing prices of vegetables and fuel items. The Wholesale Price Index (WPI) based inflation stood at 4.43 per cent in May and 0.90 per cent in June last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X