சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது.. கொரோனா பாதித்த நாடுகளுக்கு போய் வந்த 335 பேர் மாயமா? பகீர் கிளப்பும் பஞ்சாப்

Google Oneindia Tamil News

சண்டிகர்: என்னது.. 335 பேர் அதுவும், கொரோனா பாதித்த நாடுகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா.. இதைக் கேட்டால், உங்களுக்கு, அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் பஞ்சாப்பில் அதுதான் நடந்துள்ளது.

Recommended Video

    குழந்தைகளுக்கு வைரஸ் பரவாமல் இருக்க இதை கடைபிடிங்க |Some tips to safeguard your children from Corona

    பஞ்சாப் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

    கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணித்திருந்த 335 பயணிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்த அரசு கூறியுள்ளது.

    இப்படி மட்டும் செய்தால் போதும்.. கொரோனா பக்கத்திலேயே வராதுல்ல இப்படி மட்டும் செய்தால் போதும்.. கொரோனா பக்கத்திலேயே வராதுல்ல

    மாயம்

    மாயம்

    நேற்று (மார்ச் 13) நிலவரப்படி மொத்தம் 6011 பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த 335 பேர் எங்கே சென்றார்கள் என தெரியவில்லையாம். பொதுவாக இதுபோன்று வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை சோதித்து பார்த்து, தொடர்ந்து அடுத்த 28 நாட்கள் அவர்களை கண்காணிப்பது அவசியம்.

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கை


    கூட்டம் கூடும் இடங்களுக்கு போகாதீங்க. ஏதாவது இருமல், காய்ச்சல் இருந்தால், உடனே எங்களுக்கு சொல்லுங்க.. என சுகாதாரத்துறை அவர்களுக்கு எச்சரித்து அனுப்பும். அவர்களுடன் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தொலைபேசியில் தொடர்பில் இருப்பார்கள்.
    ஆனால், பஞ்சாப்பில் மாயமான 335 பேர் இன்னும் எத்தனை பேரை தொடர்பு கொள்வார்களோ, அவர்களால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படுமோ என்று நினைக்கும்போது அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

    பஞ்சாப் அரசு மெத்தனம்

    பஞ்சாப் அரசு மெத்தனம்

    பஞ்சாப் அரசின் அலட்சியப் போக்கிற்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன. எந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பது என்று இல்லையா, என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அந்த வகையில், தமிழகம் எவ்வளவோ பெட்டர். தொடர்ச்சியாக நோயாளிகளை கண்காணித்து வருவதோடு, சந்தேகத்திற்கிடமானவர்களையும் தொடர்ந்து தொலைபேசி தொடர்பிலேயே வைத்துள்ளது.

    விமான நிலையங்கள்

    இதுபற்றி பஞ்சாப் அரசு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை, 88209 பயணிகளை விமான நிலையங்களில் பரிசோதித்ததாகவும், அதில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் கண்டுபிடிக்க முடியாமல் எஸ்கேப் ஆன பயணிகளை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.

    English summary
    335 passengers with history of travel to COVID19 affected countries are untraceable in Punjab.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X