சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து மரணம்.. 2 நாளில் 38 பேர்.. பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் மர்மமாக பலி.. போலீஸ் விசாரணை!

பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் 38 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் 38 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு மாநிலங்களில், நகரங்களில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் இன்னும் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் மது கிடைக்காத குடிகாரர்கள், கள்ள சாராயம் காய்ச்சுவது, போதைக்காக புதிய போதை வஸ்துக்களை நாடுவது என்று நிறைய சம்பவங்கள் நடக்கிறது. இப்படி கள்ள சாராயம் காரணமாக, ஆங்காங்கே மக்கள் பலியாவதும் தொடர்கதையாகி உள்ளது.

ஷாக்கிங்... எக்ஸ்ட்ரா போதைக்காக.. நாட்டு மதுவுடன் சானிடைசர்... ஆந்திராவில் 10 பேர் பலி!ஷாக்கிங்... எக்ஸ்ட்ரா போதைக்காக.. நாட்டு மதுவுடன் சானிடைசர்... ஆந்திராவில் 10 பேர் பலி!

பஞ்சாப் எப்படி

பஞ்சாப் எப்படி

இந்த நிலையில் பஞ்சாப்பில் அடுத்தடுத்து மது குடித்த 38 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் எல்லோரும் கள்ள சாராயம் குடித்து பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 48 மணி நேரத்தில் 38 பேர் இப்படி அடுத்தடுத்து பலியாகி உள்ளனர். மூன்று மாவட்டங்களில் இருக்கும் மக்கள் இப்படி பலியாகி உள்ளனர்.

எங்கே மரணம்

எங்கே மரணம்

பஞ்சாப்பில் இருக்கும் அமிர்தசரஸ், பட்டாலா, டார்ன் டாரன் ஆகிய மாவட்டங்களில் மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. இப்போதுவரை அங்கு ஏற்பட்டு இருக்கும் மரணங்கள் உயர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 20க்கும் அதிகமான நபர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. சிலர் மோசமான உடல் நிலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

மரணம் எப்படி

மரணம் எப்படி

அமிர்தசரஸில் முதல் மரணம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 29ம் தேதி முதல் மரணம் ஏற்பட்டது. அதன்பின் 30ம் தேதி அதிகாலை மேலும் 2 பேர் மரணம் அடைந்தனர். அதன்பின் வரிசையாக அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்தமாக இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர். எல்லோரும் உறுப்புகள் செயல் இழந்து பலியாகி உள்ளனர்.

கள்ள சாராயம் உற்பத்தி

கள்ள சாராயம் உற்பத்தி

இவர்கள் எல்லோரும் கள்ள சாராயம் குடித்து இருக்கலாம். அருகருகே இருக்கும் மாவட்டங்களில் இதை விற்று இருக்கலாம். இதன் மூலம் இவர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
21 People died in Punjab in Two days due to alcohol consumption in three districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X