சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஞ்சாப் தேர்தல்: சித்துவுக்கு எதிராக களமிறங்கிய அகாலிதளத்தின் பிக்ரம் மஜிதியா.. செம பைட் வெயிட்டிங்

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து போட்டியிடும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி மிகவும் பலத்த போட்டி நிறைந்த தொகுதியாக உள்ளது. அவருடைய பரம எதிரியான அகாலிதளம் தலைவர் பிக்ரம் மஜிதியா அங்கு போட்டியிடுகிறார்.

இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம் இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பிப்ரவரி 14 -ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 117 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

பஞ்சாப் சட்டசபை தேர்தல்

பஞ்சாப் சட்டசபை தேர்தல்

இந்த முறையும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க வேண்டும் என்று பாஜக துடியாய் இருக்கிறது.ஒருபக்கம் ஆம் ஆத்மியும், சிரோமணி அகாலிதளமும் களத்தில் இருக்கிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் கட்சியும் பாஜக பக்கம் நிற்கிறது. தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் ஏற்கனவே பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 நவ்ஜோத் சிங் சித்துவின் தொகுதி

நவ்ஜோத் சிங் சித்துவின் தொகுதி

பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் சித்து போட்டியிடும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி மிகவும் பலத்த போட்டி நிறைந்த தொகுதியாக உள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதியில் அகாலிதளம் தலைவர் பிக்ரம் மஜிதியா போட்டியிடுவார் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

பிக்ரம் மஜிதியா

பிக்ரம் மஜிதியா

சித்து ஏற்கனவே அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளவர். கடந்த 2017-ம் ஆண்டு இந்த தொகுதியில் எளிதாக வென்றார். ஆனால் இந்த முறை அப்படி இருக்க போவதில்லை. பிக்ரம் மஜிதியா அவருக்கு மிகவும் போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் முன்னாள் அமைச்சரான பிக்ரம் மஜிதியா மீது போதைப்பொருள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 கடும் வார்த்தைபோர்

கடும் வார்த்தைபோர்

பின்னர் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றா அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. மஜிதியாவுக்கும், சித்துவுக்கும் ஏற்கனவே கடும் வார்த்தைபோர் இருந்து வந்தது. ஏனெனில் மஜிதியாவை கைது செய்யும் வரை ஓயமாட்டேன் என்று முன்பு அறிவித்து இருந்தவர் சித்து. இதனால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தனக்கு எதிராக மஜிதியா போட்டியிடுவது குறித்து சித்து இதுவரை ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amritsar East constituency, contested by senior Congress leader Navjot Singh Sidhu in Punjab, is the most contested constituency. His arch-rival Akali Dal leader Bikram Majithia is contesting there
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X