சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எகிறி அடித்த கெஜ்ரிவால்.. முதல்வர் வேட்பாளர் பக்வத் சிங் மான்.. விழித்து பார்க்கும் பஞ்சாப் பாஜக

முதல்வர் வேட்பாளர் யார் என்று பஞ்சாபில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிக்கிறார்

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் தொடர்பான முக்கிய அறிவிப்பை, அக்கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாயிருந்தது.. இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் பக்வத் சிங் மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்க போகிறது.. இதில் பஞ்சாப் மாநிலத்தில், ஒரே கட்டமாக, பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.. இந்த 5 மாநிலங்களில், 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆண்டு வருகிறது.

எனவே, பஞ்சாபை கைப்பற்ற பாஜக தீவிரமான கணக்கை போட்டு வருகிறது.. இருக்கிற பஞ்சாப்பையும் கையைவிட்டு நழுவ விட்டுவிடக்கூடாது என்று காங்கிரஸ் மும்முரமாகி வருகிறது.. இதற்கிடையே இரு ஜாம்பவான் கட்சிகளை கலங்க வைத்து வருகிறது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி..!

 ப.சிதம்பரம் சார் ரொம்ப கதறாதீங்க... கோவா தேர்தல் விமர்சனத்துக்கு கெஜ்ரிவால் பதிலடி ப.சிதம்பரம் சார் ரொம்ப கதறாதீங்க... கோவா தேர்தல் விமர்சனத்துக்கு கெஜ்ரிவால் பதிலடி

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன.. இதில் நடந்து முடிந்த தேர்தலில், மொத்தமுள்ள 77 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது... பாஜகவோ வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது... ஆம் ஆத்மி கட்சியோ, 20 தொகுதிகளை வென்று 2 பெரிய கட்சியாக பஞ்சாப்பில் விஸ்வரூபம் எடுத்தது.. இதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை.

காங்கிரஸ்

காங்கிரஸ்

அதுவும், இந்த முறை சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய முத்திரையை பதித்து உள்ளது.. மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 14 இடங்களை கைப்பற்றினாலும், மேயர் தேர்தலில் தோல்வியை தழுவியது என்னவோ லேசான சறுக்கல்தான்.. இருந்தாலும் சண்டிகரில் தனக்கிருக்கும் செல்வாக்கையும், தன் கட்சிக்கு விழுந்து வாக்குகளையும் அப்படியே தக்க வைத்து கொள்ள ஆம் ஆத்மி பலவிதமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.. இதற்கு நடுவில், தேர்தலுக்கு முந்தைய வெளியாகிய கருத்துக்கணிப்புகள், ஆம் ஆத்மிக்கு நிறைய சாதகமான சூழல் இருப்பதாக கூறப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

வேட்பாளர்

வேட்பாளர்

இப்படிப்பட்ட சூழலில்தான், அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்லாமலேயே இருக்கிறார்.. எனினும், 2 பேர் ஆப்ஷன்களை கடந்த வாரம் தந்திருந்தார்.. பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் பக்வந்த் சிங் மான் மற்றும் மாநில பொறுப்பாளர் ராகவ் சதா ஆகியோரில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த யோசித்து வந்தார். அதனால்தான், "ஜனதா சுனேகி ஆப்னா சி.எம்" என்ற பெயரில் புதிய திட்டத்தை அம்மாநில மக்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, 70748 70748 என்ற போன் நம்பரை மக்கள் அழைத்து, தங்களுக்கு பிடித்தமான முதல்வர் வேட்பாளரை முன்மொழியலாம் என்றார்.

 யார் அவர்?

யார் அவர்?

ஜனவரி 17ம் தேதி மாலை வரை இந்த போன் வசதி இருக்கும் என்றும், விருப்பமான முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறியிருந்தார். கெஜ்ரிவால் மக்களுக்கு தந்திருந்த டைம் நேற்று மாலையுடன் முடிவடைந்துவிட்டது.. எனவே, இன்றைய தினம் யார் அந்த முதல்வர் வேட்பாளர் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பகவந்த் சிங் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 பகவத் சிங் மான்

பகவத் சிங் மான்

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் பேசும்போது, "பக்வத் சிங் மான் நமக்கு நெருக்கமானவர்.. என்னுடைய தம்பி மாதிரி.. கட்சியில் செல்வாக்கு பெற்றவர்... அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்தோம்... ஆனால், அவர்தான், மக்களே அதை தீர்மானிக்கும் என்று சொல்லிவிட்டார்.. அவர் ஆசைப்பட்டதால்தான், இப்படி போன் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளோம்" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.. 12 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டுள்ள பஞ்சாப்பில், ஆம் ஆத்மி என்ன இனி செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Arvind Kejriwal will make an important announcement today about his party Punjab Chief Minister Candidate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X