சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தவறுதான்.. நடந்திருக்க கூடாது.. மன்னிப்பு கேட்டார் அசோக் கெலாட்.. சீற்றம் தணியாத ராகுல், சோனியா!

Google Oneindia Tamil News

சண்டிகர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுக்கு எதிராக அணி திரண்ட காரணத்தால் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில் இதில் ஜி 23 குழுவை சேர்ந்த சசி தரூர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அசோக் கெலாட் சோனியா காந்தி சார்பாக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தொடங்கியது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற இருக்கிறது.

சக்ஸஸ்! 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின் சக்ஸஸ்! 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின்

அசோக் கெலாட்

அசோக் கெலாட்

அசோக் கெலாட் தலைவராகும் பட்சத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்குத்தான் அசோக் கெலாட் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ராஜஸ்தான் சட்டசபையில் 107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 90 எம்எல்ஏக்கள் அசோக் கெலாட் பக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சச்சின் பைலட்டை முதல்வராக்கினால் நாங்கள் ராஜினாமா செய்துவிடுவோம் என்று இவர்கள் மிரட்டி உள்ளனர். அசோக் கெலாட்தான் முதல்வர் அல்லது அவர் கை காட்டும் நபர்தான் முதல்வர் என்று அவர்களின் குழு தெரிவித்து வருகிறது.

சோனியா காந்தி

சோனியா காந்தி

அதே சமயம் இந்த எதிர்ப்பிற்கு நான் காரணம் அல்ல., என்னுடைய ஆதரவாளர்கள் இப்படி செய்கிறார்கள். அவர்களை நான் கட்டுப்படுத்தவில்லை என்று அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். என்னதான் அசோக் கெலாட் தனக்கு எதுவுமே தெரியவில்லை என்று கூறினாலும் அவருக்கு தெரியாமல் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் இப்படி தலைமையை எதிர்க்க மாட்டார்கள். அவரின் தூண்டுதல் இல்லாமல் 90 எம்எல்ஏக்கள் இப்படி சச்சின் பைலட்டை எதிர்க்க மாட்டார்கள்.

சச்சின் பைலட்

சச்சின் பைலட்

அசோக் கெலட்டின் இந்த ஈகோ காரணமாக அவர் மீது சோனியா, ராகுல் ஆகியோர் கடுமையான கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. என் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தது தவறுதான். மன்னித்துவிடுங்கள். இப்படி நடந்து இருக்க கூடாது என்று அசோக் கெலாட் கூறியதாக தெரிகிறது.

மோதல்

மோதல்

ஆனால் சோனியா தரப்போ.. உங்களுக்கும் ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் செய்யும் புரட்சிக்கும் தொடர்பு இல்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்களின் அனுமதி இன்றி இதெல்லாம் நடந்து இருக்காது என்று கோபத்தில் இருக்கிறதாம். அசோக் கெலாட் இப்படி மன்னிப்பு கேட்டாலும் ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் தங்கள் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். சச்சின் பைலட்டை முதல்வராக ஏற்கவே முடியாது என்று அவர்கள் தெளிவாக தெரிவித்துவிட்டனர். நேற்று நடந்த மீட்டிங்கிற்கு கூட அவர்கள் வரவில்லை.

அவமதிப்பு

அவமதிப்பு

அசோக் கெலாட் சோனியாவை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். அசோக் கெலாட் ஒருவேளை தலைவரானால்.. அவர் ராஜஸ்தான் முதல்வரையும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அசோக் கெலாட்டை தலைவராக்குவது சரியா? என்ற கேள்வி தற்போது சோனியா தரப்பில் எழுந்துள்ளது. இப்போதே இப்படி அரசியல் செய்யும் அசோக் கெலாட்.. தலைவரானால் என்னவெல்லாம் செய்வார் என்ற கேள்வி சோனியா தரப்பில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Ashok Gehlot reportedly apologies to Congress top brass amid the Rajasthan tussle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X