சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக தலைவர்.. அதிரடியாக சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

சண்டிகர்: பெண் தோழியின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படும் ஹரியானா மாநில பாஜக செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் சந்தர் பிரகாஷ் காதுரியா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சண்டிகரில் செக்டார் 63 பகுதியில் ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு தன் பெண் தோழியை பார்க்க சந்தர் பிரகாஷ் காதுரியா (வயது 51) சென்றுள்ளார். அப்போது அங்கு தோழிக்கு தெரிந்தவர் அங்கு வரவே அவர் உடனே அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார். இதையடுத்து அவர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.. எதிர்பாராத விதமாக துணி அவிழ்ந்துவிட, அவர் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனையில் (பிஜிஐஎம்இஆர்) காதுரியா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BJP leader who jumped off balcony of women house expelled for six years

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகியது- இதையடுத்து காதூரியாவை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநில பாஜக தலைவர் சஸ்பெண்ட் உத்தரவை அறிவித்த போதும், அதில் காரணங்கள் குறிப்பிடவில்லை.

 வெட்டவெளி செக்போஸ்டில் கல்யாணம்.. தாலி கட்டிய மாப்பிள்ளை.. பிரித்துச் செல்லப்பட்ட பெண்! வெட்டவெளி செக்போஸ்டில் கல்யாணம்.. தாலி கட்டிய மாப்பிள்ளை.. பிரித்துச் செல்லப்பட்ட பெண்!

கர்னல் நகரைச் சேர்ந்த சந்தர் பிரகாஷ் காதுரியா, 2009 சட்டமன்றத் தேர்தலில் கர்னல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்னலில் போட்டியிட பாஜகவில் சீட்டை கேட்டார். ஆனால் அவருக்கு பாஜக தலைமை சீட் தரவில்லை.

English summary
BJP leader Chander Prakash Kathuria who jumped off balcony of women house expelled for six years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X