சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்... பளபளக்கும் பாஜக தேர்தல் அறிக்கை

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் வரும் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள், இளைஞர்கள், முதியோர்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

15 தலைப்புகளில் 248 வாக்குறுதிகள் இந்த அறிக்கையில் உள்ளன. ''என் கனவு ஹரியானா'' என்ற முழக்கத்துடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக.

bjp working president j.p.nadda release haryana state manifesto

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளில் சில மட்டும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன;

  • விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும்.
  • பட்டியலின மக்களுக்கு ரூ. 3 லட்சம் வரை பிணையில்லா கடன் அளிக்கப்படும்.
  • ரூ. 500 கோடி செலவில் சுமார் 25 லட்சம் இளைஞர்களுக்கு சுயதிறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • காசநோய் இல்லாத மாநிலமாக ஹரியான மாற்றப்படும்
  • விவசாயிகளின் வருவாய் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும்.
  • முதியோர் உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தி அளிக்கப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களையப்படும்.
  • பிரதம மந்திரி வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டுக்குள் உரிய பயனாளிகள் கண்டறியப்பட்டு வீடுகள் கட்டிதரப்படும்.
  • விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்.
  • இரண்டு பெண்குழந்தைகள் உள்ள வீட்டில் ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சத்துக்கும் கீழ் இருந்தால், அந்த பெண்குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்கும்.
  • பள்ளி, கல்லூரி மாணவிகளுக்காக ''பிங்க் பேருந்துகள்'' இயக்கப்படும்.
  • புதிதாக 2,000 சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
  • விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 1,000 விளையாட்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ஹரியானா மாநிலத்தில் வெளிப்படைத்தன்மையுடன் அரசு நிர்வாகம் இயங்கியதாகவும், இந்த நிலை மீண்டும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

English summary
bjp working president j.p.nadda release haryana state manifesto
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X