சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சார்.. என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க".. பேசாம போய்ட்டே இரு.. இல்லை உன்னை போட்ருவேன்..!

2 கொலைகளை செய்த ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

சண்டிகர்: குஜராத் மாநிலம் பல்சாத் நகரம்... அங்குள்ள ஒரு பழைய கார் வாங்கி விற்கும் டீலரின் ஓனரான அல்பேஷிடமிருந்து போலீஸாருக்கு போன் வந்தது. உடனே வாங்க சார்.. அவசரம் என்று அல்பேஷ் அலற.. அங்கு வந்த போலீஸார் அல்பேஷ் சுட்டிக் காட்டிய நபரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது பெயர் ஹேமந்த் லம்பா. தேசிய பாடிபில்டர் பட்டம் வென்றவர். தேசிய விருது பெற்றவர். டெல்லியைச் சேர்ந்தவர்.

முதலில் போலீஸாருக்கு எதுவும் புரியவில்லை.. விசாரணைக்குப் பிறகுதான் தெரிந்தது.. ஹரியானா கொலையில் தொடர்புடையவர் லம்பா என்று.. அது மட்டுமல்ல.. இன்னொரு கொலையையும் அவர் செய்திருந்தார்

லம்பா எவ்வளவு பெரிய ஆள்.. அவரா இப்படி.. ஹரியானா டிஜிபி அலுவலகத்தில் குவிந்திருந்த செய்தியாளர்கள் முகத்தில் ஏகப்பட்ட கேள்விக்குறிகள்.. எல்லாவற்றுக்கும் நிறுத்தி நிதானமாக பதிலளிக்க ஆரம்பித்தார் கூடுதல் டிஜிபி ஆர்சி மிஸ்ரா.

ஹலோ.. சார் பாடி கிடக்கு.. சீக்கிரம் வாங்க.. அதிர வைத்த ரேவரி பயங்கரம்..! (பார்ட் 1)ஹலோ.. சார் பாடி கிடக்கு.. சீக்கிரம் வாங்க.. அதிர வைத்த ரேவரி பயங்கரம்..! (பார்ட் 1)

லம்பா

லம்பா

நடந்தது இதுதான்...

தென் மேற்கு டெல்லியில் வசித்து வருபவர்தான் லம்பா. இவருக்கும் ஹரியானாவில் பிணமாகக் கிடந்த பெண்ணுக்கும் இடையே நட்பு இருந்தது. இது நெருக்கமானது.. நெருங்கிப் பழகினர். சம்பவத்தன்று அதாவது டிசம்பர் 7ம் தேதி ஒரு டாக்சியைப் பிடித்து அதில் அந்தப் பெண்ணுடன் ஹரியானாவுக்கு சென்றார் லம்பா. டாக்சியை ஓட்டி வந்தது தேவேந்திரா. இவரும் டெல்லிக்காரர்தான்.அந்த டாக்சியின் ஓனரும் கூட.

ஆத்திரம்

ஆத்திரம்

ஜெய்ப்பூரிலிருந்து அந்தப் பெண்ணின் செல்போன் மூலமாக இந்த டாக்சி புக் செய்யப்பட்டிருந்தது. அப்பெண் பிணமாகக் கிடந்த இடத்திற்கு அருகே வந்தபோது அவருக்கும், லம்பாவுக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த லம்பா, அப்பெண்ணைக் கொலை செய்து விட்டார். துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதில் அப்பெண் பிணமானார். பிணத்தை சாலையில் வீசி விட்டு தேவேந்திராவுடன் அந்த இடத்தை விட்டுப் பறந்தார் லம்பா.

 ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

"சார் என்ன சார் சுட்டுட்டீங்க.. அந்தப் பெண்ணை இப்படிக் கொன்னுட்டீங்களா.. எனக்குப் பயமா இருக்கு சார்" பதறினார் டிரைவர் தேவேந்திரா. அவரது தலையில் துப்பாக்கியை வைத்த லம்பா, "வண்டியை நேரா ஜெய்ப்பூருக்கு விடு. எங்கேயும் நிறுத்தக் கூடாது. எதுவும் பேசக் கூடாது.. வாயைத் திறந்தே.. ஒரே அழுத்து மேலே போய்ருவ" உத்தரவிட்டார் லம்பா.. தேவேந்திரா அதன் பிறகு பேசவே இல்லை. வண்டி ஜெய்ப்பூரை நோக்கி பறக்க ஆரம்பித்தது.

தேவேந்திரா

தேவேந்திரா

கார் வேகமாக பறக்க ஆரம்பித்ததுமே லம்பாவின் மனதில் இன்னொரு கொலைக்கான ஸ்கெட்ச்சும் வேகமாக பிறக்க ஆரம்பித்தது. எப்படியும் தேவேந்திரா போட்டுக் கொடுத்து விடுவார். எனவே அவரையும் காலி செய்வது என திட்டமிட்டார் லம்பா. ஜெய்ப்பூரை நெருங்கிய நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் காரை நிறுத்த சொன்ன லம்பா.. அங்கு வைத்து தேவேந்திராவையும் சுட்டு வீழ்த்தினார். பிறகு உடலை சாலையோரமாக போட்டு விட்டு காரை எடுத்துக் கொண்டு பறந்தார்.

 டீலர் ஓனர்

டீலர் ஓனர்

குஜராத் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த லம்பா, பல்சாத் என்ற இடத்தில் உள்ள ஒரு கார் ஏஜென்சியை அணுகினார். அதன் ஓனர் அல்பேஷ்.. இந்த டாக்சியை வச்சுட்டு காசு கொடு என்று கேட்டார். டீலர் ஓனருக்கு சந்தேகம் வெடித்தது. லம்பாவை உட்கார வைத்து விட்டு, காரில் இருந்த ஓனரின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டார்.

 அய்யோ..

அய்யோ..

மறு முனையில் பேசியது தேவேந்திராவின் மனைவி. "உங்க காரை ஒருத்தர் எடுத்துட்டு வந்து விற்க விரும்புகிறார். அவர் யார்" என்று அல்பேஷ் கேட்க.. "அய்யோ.. அவர் இரட்டைக் கொலை செய்து சிக்கியவர். எனது கணவரையும் கொன்று விட்டார். அவரை விடாதீங்க. பிடிச்சு வைங்க. போலீஸுக்குத் தகவல் கொடுங்க" என்று தேவேந்திரா மனைவி அலறவும் அல்பேஷ் சுதாரித்தார்.. போலீஸுக்கு தகவல் போனது. விரைந்து வந்தனர் போலீஸார்.. சிக்கினார் லம்பா.

 ஏன் கொன்றார்?

ஏன் கொன்றார்?

போலீஸாருக்கு இப்போது ஒரு பெரும் குழப்பம் + கேள்வி எழுந்து நின்றது. கொல்லப்பட்ட பெண் மீது மிகவும் பிரியமாக இருந்துள்ளார் லம்பா. பிறகு ஏன் கொன்றார்..? அடுத்தடுத்து நடைபெறப் போகும் விசாரணையில் தான் இது தெரிய வரும். கிரைம் திரில்லர் நாவல்களில் வருவது போல மிக மிக நேர்த்தியாக இந்த கொலைகளை செய்துள்ளார் லம்பா. அடுத்தடுத்து அவர் யோசித்துள்ளார். மின்னல் வேகத்தில் முடிவெடுத்துள்ளார்.

 ரத்தக்கறை

ரத்தக்கறை

27 வயதுதான் ஆகிறது லம்பாவுக்கு. பிடெக் படித்தவர். சிவில் என்ஜீனியரும் கூட. ஒரு நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார்.. இன்று கொலைகாரராக.. கைகளில் ரத்தக் கறையுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த தேசிய பாடி பில்டர். ரேவரி போலீஸார்.. விசாரணையில் எடுத்து லம்பாவை துருவி துருவி விசாரிக்க காத்திருக்கின்றனர்.

English summary
national body builder killed his girl friend and cab driver, chhandigarh police have arrested him in double murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X