சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிரிக்கெட் சங்க நிதி மோசடி: பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி மோசடி தொடர்பாக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக சிபிஐ விசாரித்தது. இதில் ரூ38 கோடி மோசடி குறித்து 2015-ம் ஆண்டு சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

ED questions Farooq Abdullah on Kashmir Cricket Association

பின்னர் இந்த வழக்கில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 3 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டுக்கு பிசிசிஐ கொடுத்த நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்பது சிபிஐ குற்றச்சாட்டு.

பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த போதுதான் இம்முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு இன்று ஆஜராக பரூக் அப்துல்லாவுக்கு சம்மன் அனுப்பியது.

இதை ஏற்று சண்டிகர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பு பரூக் அப்துல்லா ஆஜரானார். அப்போது அன்னிய செலாவணி மோசடி குறித்தும் பரூக் அப்துல்லாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

English summary
Enforcement Directorate questioned Farooq Abdullah in connection with a money-laundering scam related to Jammu and Kashmir Cricket Association.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X