சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'எனது தலையே போனாலும், விவசாயிகளுக்கு எந்த தீங்கும் வர விட மாட்டேன்' -பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்

Google Oneindia Tamil News

சண்டிகர்: எனது தலையே போனாலும், விவசாயிகளுக்கு எந்தத் தீங்கும் வரமாட்டேன் என்று பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே இங்கு உட்கட்சி பூசல் நடந்து வருகிறது. பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துக்கும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையில் கடும் பனிப்போர் நிலவியது

வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

இடையில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. நவ்ஜோத் சிங் சித்துவும், அமரீந்தர் சிங்கும் டெல்லி சென்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட்டனர்.

அதிருப்தி

அதிருப்தி

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏதும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்று சோனியா காந்தி அவர்களை சமாதானம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து அமரீந்தர் சிங்குக்கு எதிராக அனைவரும் திரண்டனர். முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் மீது எம்.எல்.ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ராஜினாமா

ராஜினாமா

தனக்கு எதிராக நடந்து வருகிற சமீபத்திய நிகழ்வுகளை வேதனையுடன் விவரித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர்சிங். சித்துவுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அமரீந்தர்சிங் குண்டை தூக்கி வீசினார் பஞ்சாப் அடுத்த முதல்வர் யார்? என்ற விவாதம் எழுந்த நிலையில் முதல்வர் பதவி வேண்டாம் என்று கட்சி தலைவர்கள் பலரும் அலறியடித்து ஓடினார்கள்.

சரண்ஜித் சிங் சன்னி

சரண்ஜித் சிங் சன்னி

நீண்ட ஆலோசனைகளின் முடிவில் சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தலித் தலைவரான சரண்ஜித் சிங் சன்னி தொழில்கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தலையே போனாலும்...

தலையே போனாலும்...

இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது:- நான் மண் மற்றும் வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு வீட்டிலிருந்து வந்தவன். நான் ஒரு ஏழை மனிதனின் பிரதிநிதி. நான் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வர விடமாட்டேன். இன்று மணல் மாஃபியா குறித்து முடிவெடுப்போம். நிலுவையில் உள்ள பில்களுக்காக ஒரு ஏழையின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. நாம் பஞ்சாபைப் பலப்படுத்த வேண்டும். இது விவசாயிகளின் நிலை. வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு நான் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எனது தலையே போனாலும், விவசாயிகளுக்கு எந்தத் தீங்கும் வரமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Punjab Chief Minister Saranjit Singh Sunny has said that even if my head goes off, no harm will come to the farmers. The Congress party is in power in the state of Punjab
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X