சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிரும் பஞ்சாப்.. விவசாயிகள் போராட்டம்.. ரயில் ஓடல.. அத்தியாவசிய பொருள் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

பஞ்சாபில் போராட்டத்தை இன்று காலை துவங்கினர் விவசாயிகள்

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப்பில் விவசாயிகள் மொத்த பேரும் திரண்டு, தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டு, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.. வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் அமைப்பினர் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை இன்று காலை முதல் தொடங்கி உள்ளனர்.. இதையடுத்து, உணவு தானியங்கள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. மேலும் விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இம்மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்... கிஷான் மஜ்தூர் சங்கரஷ் சார்பில் அமிர்தசரசில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தை துவங்கி விட்டனர்.

வேளாண் மசோதா...பஞ்சாபில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்... 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து!!வேளாண் மசோதா...பஞ்சாபில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்... 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து!!

ரயில் மறியல்

ரயில் மறியல்

இன்று முதல் செப்டம்பர் 26 வரை விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்... வேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்த போராட்டத்தை இன்று முதல் 3 நாட்களுக்கு நடத்தப்போவதாக, விவசாய சங்கம் அதாவது கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்ட அறிவித்திருந்தது.. அதனால், இன்று முதல் 26ம் தேதி வரை 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.. சூழ்நிலைக்கு ஏற்ப சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என்று மண்டல ரெயில்வே மேலாளர் தெரிவித்திருந்தார்.

போராட்டம்

போராட்டம்

விவசாயிகள் அறிவித்தபடியே, இன்று காலையில் போராட்டத்தை துவங்கினர்.. அந்த மாநிலத்தில் உள்ள எல்லா விவசாயிகளும் ஒன்று திரண்டு தண்டவாளங்களில் உட்கார்ந்து கொண்டனர்.. மசோதாக்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறே உள்ளனர்..இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள்

அத்தியாவசிய பொருட்கள்

ரயில்கள் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து, வடக்கு மற்றும் வடக்கு மத்திய ரயில்வே பொதுமேலாளர் ராஜீவ் சவுத் சொல்லும்போது, "விவசாயிகள் நடத்தும் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தால் சரக்கு ரயில் போக்குவரத்து சேவை பெருமளவு பாதிக்கப்படும்... அத்தியாவசிய பொருட்களைப் பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்படும்.

போராட்டம்

போராட்டம்

இப்பதான் கொரோனா வைரஸிலிருந்து மெல்ல மெல்ல பொருளாதாரம் மீண்டு வருகிறது... இந்த நேரத்தில் போராட்டம் நடத்தினால், சரக்கு போக்குவரத்தை அதிகமாகவே பாதிக்கும்... அவசரத்துக்கு வெளியூர் செல்லும் ரயில் பயணிகளையும் இந்த போராட்டம் நிறையவே பாதிக்கும்" என்றார்.

English summary
Farmers Bill: Rail roko agitation to severely affect movement of essential items foodgrains railways
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X