சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு.. ஹரியானாவில் மாஸ் மறியல் நடத்திய விவசாயிகள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து

Google Oneindia Tamil News

சண்டிகர்: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானாவில் விவசாயிகள் முக்கிய சாலையை வழிமறித்து மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

Farmers in Haryana blocks the major road in Sirsa

இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஹரியானாவில் முக்கிய சாலையான சிர்ஸாவில் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் விவசாய பொருட்களை குறைந்தபட்ச விலையை விட குறைவாக கொள்முதல் செய்வோரை தண்டிக்க இந்த அரசு சட்டங்களை இயற்ற வேண்டும். அப்போதுதான் நம் விவசாய பொருட்கள் விற்பனைக்கு ஒரு உத்திரவாதம் கிடைக்கும் என்றனர்.

ராஜ்யசபாவில் கடும் அமளி- வேளாண் மசோதா நகல்கள் கிழிப்பு- சபை தலைவர் மைக் உடைப்பு!ராஜ்யசபாவில் கடும் அமளி- வேளாண் மசோதா நகல்கள் கிழிப்பு- சபை தலைவர் மைக் உடைப்பு!

விவசாயிகள் போராட்டம் நடத்திய சிர்ஸா சாலை முக்கிய சாலை என்பதால் இங்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

English summary
Farmers in Haryana blocks the major road in Sirsa. Transportation affects heavily for 3 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X