சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹரியானா ஆட்சி.. கோபால் கந்தா... பாஜகவின் மொத்த நம்பிக்கையும் இவர்தான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP's Manohar Lal Khattar to be sworn-in as the Cheif Minister of Haryana on tomorrow.

    சண்டிகர்: கோபால் கந்தா.. இவர்தான் பாஜக முழுமையாக நம்பும் முக்கிய நபர். ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைய கந்தா களம் இறங்கியுள்ளார்.

    ஒரு காலத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தவர் இவர். சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும் கூட. ஆனால் இன்று அதே பாஜக ஹரியானாவில் ஆட்சியமைக்க கந்தா களம் இறங்கியுள்ளார்.

    ஹரியானாவில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான பலத்தை 8 சுயேச்சைகளிடமிருந்து பெற பாஜக முடிவெடுத்து களம் இறங்கியுள்ளது. இந்த வேலையைத்தான் கந்தா கையில் எடுத்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சிக்கு ஏன் இந்த சறுக்கல்.. புயல் கிளப்ப தவறியது ஏன்.. என்ன நடந்தது?நாம் தமிழர் கட்சிக்கு ஏன் இந்த சறுக்கல்.. புயல் கிளப்ப தவறியது ஏன்.. என்ன நடந்தது?

    கிங் மேக்கர்

    கிங் மேக்கர்

    எட்டு எம்எல்ஏக்களில் கந்தாவும் ஒருவர். இவரை வைத்துத்தான் மற்ற 7 பேரையும் வளைக்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உண்மையில் சொல்வதானால் கந்தாவும் ஒரு கிங் மேக்கராகியுள்ளார். ஹரியானா லோகித் கட்சியின் தலைவர்தான் கந்தா. இவர் 2 எம்எல்ஏக்களை கூட்டிக் கொண்டு டெல்லி போயுள்ளார். அங்கு பாஜக தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார். இவர்களுடன் பாஜக எம்பி சுனிதா துக்கலும் உடன் சென்றுள்ளார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    சுயேச்சை எம்எல்ஏ ரஞ்சீத் சிங்குடன் கந்தா விமானத்தில் இருக்கும் படம் வைரலாகியுள்ளது. இதன் மூலம் பாஜக ஆட்சியமைக்க கந்தா தீவிரமாக களம் இறங்கியிருப்பது உறுதியானது. பாஜக மக்களுக்காக பாடுபடும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் பாஜகவை ஆதரிக்கிறேன்.. எனது தொகுதியும் இதனால் பலன் பெறும் என்று கூறியுள்ளார் கந்தா. இவர் கடந்த காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவர்.

    சர்ச்சை

    சர்ச்சை

    ஒரு விமான பணிப்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்தவர். அதன் பிறகு தனிக் கட்சி ஆரம்பித்து கலக்க ஆரம்பித்தார். பாஜகவை கடுமையாக சாடி அரசியல் செய்த இவர் பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக மாறினார். இப்போது பாஜக ஆட்சி அமைய தீவிரமாக களம் இறங்கியுள்ளார். பாஜக ஆட்சி அமைத்தால் இவர் அமைச்சராவார் என்று சொல்லப்படுகிறது.

    ஆதரவாளர்

    ஆதரவாளர்

    ஆரம்ப காலத்தில் இவர் சாதாரண ஷூ பிசினஸ் செய்து வந்தார். பிறகு படிப்படியாக அரசியலுக்கு வந்தார். முதலில் இந்திய தேசியலோக் தளம், பிறகு காங்கிரஸ் என்று அரசியல் செய்தவர், இப்போது பாஜக ஆதரவாளராக மாறியுள்ளார்.

    English summary
    haryana and maharashtra election result 2019: Gopal Kanda is the key player to form BJP govt in Haryana
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X