சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹரியானா... காங்கிரஸ் திடீர் எழுச்சி.. மெஜாரிட்டியை பெற முடியாமல் பாஜக தவிப்பு

ஹரியானா வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Haryana assembly elections 2019 | BJP leading | ஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை

    சண்டிகர்: ஹரியானாவில் புதிய வரலாறு படைக்கும் நிலையில் காங்கிரஸ் உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு உருவாகியுள்ளது. அதேசமயம், யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி அங்கு திடீர் எழுச்சி பெற்று பாஜகவுக்கு கடும் போட்டியைக் கொடுத்துள்ளது.

    ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள் இந்த 3 கட்சிகள்தான் பிரதானம். இதைத் தவிர சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்வாதி, ஜனநாயக் ஜனதா கட்சி போன்றவைகளும் உள்ளன.

    ஆரம்பத்தில், பாஜக, சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டணி வைத்திருந்தது. ஆனால் அந்த கூட்டணியும் ஒருசில காரணத்தில் முறித்து கொள்ளப்பட்டது. அதனால், அகாலிதளம் இப்போது, ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தள் கட்சியுடன் சேர்ந்து கொண்டு, இந்த தேர்தலை சந்தித்துள்ளது.

    2 மாநிலத்திலும் காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. தீவிர யோசனையில் அமித் ஷா.. என்ன முடிவு எடுப்பார்?2 மாநிலத்திலும் காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. தீவிர யோசனையில் அமித் ஷா.. என்ன முடிவு எடுப்பார்?

    கோட்டை

    கோட்டை

    அது மட்டும் இல்லை.. ஹரியானாவின் இந்த தேர்தல், மிக முக்கிய ஒன்றாக பாஜகவால் பார்க்கப்பட்டது. காங்கிரஸின் கோட்டையை மறுபடியும் வென்றாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    எம்பி தேர்தல் தோல்வியின் காரணமாக பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமையவில்லை. அதேபோல, வரும் வருடம் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்க போவதால், ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை.

    உட்கட்சி பூசல்

    உட்கட்சி பூசல்

    இப்படி பிரதான கட்சிகள் எல்லாமே ஆளுக்கு ஒரு திசையில் செல்ல நேரிடவும், காங்கிரஸ் கட்சி ஹரியானா மாநிலத்தில் தனித்து போட்டியிடும் சூழல் ஏற்பட்டது. காங்கிரஸின் உட்கட்சி குழப்பம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லாததுதான் பாஜகவுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது .

     கருத்துக் கணிப்பு

    கருத்துக் கணிப்பு

    தேர்தலுக்கு முந்தைய கணிப்பும் சரி, பிந்தைய கணிப்பும் சரி, காவிக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. 90 தொகுதிகளில் 47 இடங்களை பிடித்த பாஜக, இந்த முறை எப்படியும் 70 இடங்களையாவது பிடித்து விடும் என்றும் கட்டியம் கூறின.

    திருப்பம்

    திருப்பம்

    இந்த முறை பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் வாக்கு எண்ணிக்கையில் இன்று எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் முன்னணியில் இருப்பது என்னவோ பாஜகதான். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் வலுவான வேகத்தில் முன்னேறி வருகிறது.

    தகர்த்து விட்டது

    தகர்த்து விட்டது

    கடைசியாக கிடைத்த தகவலின்படி பாஜக 43 இடங்களிலும், காங்கிரஸ் கட்சிக்கு 36 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இது யாரும் எதிர்பாராதது. காரணம், அனைத்து எக்சிட் போல்களும் சொல்லிவைத்தாற் போல 10 சீட்டுகளுக்கு மேல் காங்கிரஸுக்குக் கிடைக்காது என்று கூறியிருந்தன. ஆனால் அத்தனையையும் தகர்த்து பொய்யாக்கி விட்டது காங்கிரஸ்.

    சோனியா

    சோனியா

    இத்தனைக்கும் சோனியா காந்தி வந்து பிரச்சாரம் செய்யவில்லை. அனைத்து சூழல்களும் காங்கிரஸுக்கு பாதகமாகவே இருந்தன.அப்படி இருந்தும், இந்த அளவுக்கு பாஜகவுக்கு காங்கிரஸ் டஃப் கொடுப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கதுதான். தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு இன்னும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலம் கிடைக்கவில்லை. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாகும்.

    யாருக்கு ஆட்சி?

    யாருக்கு ஆட்சி?

    இருப்பினும் பெரும்பான்மை பலத்தை பாஜக எட்டும் என்று நம்பப்படுகிறது. அப்படி நடக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலரை இழுக்கும் வேலைகளுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால், ஹரியானாவில் காங்கிரஸுக்குப் பிறகு ஆட்சியை தக்க வைத்த 2வது கட்சி என்ற பெருமை பாஜகவுக்குக் கிடைக்கும்.

    English summary
    maharashtra and hariyana assembly election 2019: there is a tought fight beteeen bjp and congress in haryana
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X