உறுதிமொழி... இந்தியாவை ‛இந்து நாடாக்குவோம்’... ஹரியானா பாஜக எம்எல்ஏ செயலால் பரபரப்பு
சண்டிகர்: ‛‛இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம். இதற்கு தியாகம் செய்யவும் தயாராக இருப்போம்'' என ஹரியானா பாஜக எம்எல்ஏ அசீம் கோயல் தனது கட்சியினருடன் உறுதிமொழி ஏற்ற வீடியோவாக வெளியாகி உள்ளது.

ஹரியானாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. மனோகர் லால் கட்டார் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். மாநிலத்தில் உள்ள அம்பாலா நகர் எம்எல்ஏவாக இருப்பவர் அசீம் கோயல் உள்ளார். இவரும் பாஜகவை சேர்ந்தவர்.
இந்நிலையில் அம்பாலா நகரில் உள்ள அகர்வால் பவனில் பொது சிவில் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அசீம் கோயல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‛‛இந்தியா இந்து நாடாக மாற வேண்டும். இதற்காக எத்தனை தியாகங்களை வேண்டுமானலும் செய்ய தயாராக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைய இடைவிடாது உழைக்க வேண்டும். இதற்கு உதவி செய்ய தெய்வங்களும், முன்னோர்களும் நமக்கு வலிமை தர பிரார்த்தனை செய்ய வேண்டும்'' என பேசினார்.
இலங்கைக்கு நாம் தமிழர் சார்பில் உதவி! துயர் துடைக்க பொருளுதவி கோரும் சீமான்
அதன்பிறகு எம்எல்ஏ அசீம் கோயல் தலைமையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கைகளை நீட்டி உறுதிமொழி ஏற்றனர். அப்போது அவர்கள், ‛‛இந்தியாவை இந்து நாடாக ஆக்குவோம். இது இந்து நாடாக தான் இருக்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள உறுதியளிக்கிறோம். தேவைப்பட்டால் தியாகங்களையும் செய்வோம்'' என கூறினர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இதுபற்றி அசீம் கோயலிடம் கேட்டதற்கு, ‛‛நான் எம்எல்ஏவாக இல்லாமல் ஒரு இந்துவாக உறுதிமொழி ஏற்று கொண்டுள்ளனே். இதில் தவறு இல்லை. மாறாக பெருமை கொள்கிறேன்'' என்றார்.
கடந்த 2 வாரத்துக்கு முன்பு அசீம் கோயலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்தேவ் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் 2019ல் நடந்த தேர்தலில் 2வது முறையாக அம்பாலா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.