சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காதலர்களுடன் ஊர் சுற்றுவது!. பிரிந்த பிறகு அவர்கள் மீதே பலாத்கார புகாரளிப்பது- ஹரியாணா முதல்வர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டீஸ்கரில் 2வது மற்றும் இறுதிகட்ட சட்டசபை தேர்தல் | ஹரியாணா முதல்வர் சர்ச்சை பேச்சு- வீடியோ

    சண்டீகர்: பிரிந்து சென்ற காதலர்களை திரும்ப பெறுவதற்காகவே பொய்யான பாலியல் புகார்களை அளிப்பதாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    சண்டீகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் கட்டார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அண்மைகாலமாக ஹரியாணாவில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது தவறு.

    பலாத்காரங்கள் முன்பு கூட நடந்தன. தற்போதும் நடக்கின்றன. இது மிகவும் கவலையளிக்கிறது. 80 முதல் 90 சதவீதம் பெண்கள் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களால்தான்.

    சர்ச்சை

    சர்ச்சை

    ஆண் நண்பர்களுடன் நாள் கணக்கில் சுற்றித் திரிக்கிறார்கள். ஒரு நாள் திடீரென அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. இதையடுத்து அந்த நபர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பெண்கள் புகார் கூறுகின்றனர் என்று கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    வருத்தம்

    வருத்தம்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரன்தீப் சுரேஜ்வாலா கூறுகையில் பெண்கள் குறித்து முதல்வர் கூறிய கருத்து வருந்தத்தக்கது. இந்த கருத்து கட்டார் அரசு பெண்களுக்கு எதிரான மனநிலையை கொண்டது என்பதையே வெளிப்படுத்துகிறது. பலாத்காரங்கள், கூட்டு பலாத்காரங்கள் முழுவதுமாக தடுக்க முடியாமல் பெண்கள் மீது குற்றம் சொல்வது வருத்தத்துக்குரியதாகும் என்றார்.

    சுதந்திரம்

    சுதந்திரம்

    இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில் ஒரு மாநில முதல்வரே இதுபோல் பேசினால் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பர். பலாத்காரங்களை முதல்வர் நியாயப்படுத்துகிறார். இதனால்தான் ஹரியாணாவில் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. பலாத்காரம் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பி சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் என்றார்.

    சர்ச்சை

    சர்ச்சை

    இதுபோல் பெண்கள் மீது கட்டார் குற்றச்சாட்டுவது முதல் முறையல்ல.கடந்த 2014-ஆம் ஆண்டு கட்டா கூறுகையில் பெண்கள் ஒழுங்காக ஆடை அணியாததே பெரும்பாலான பலாத்காரங்கள் நடக்கின்றன. ஒரு பெண் நன்றாக ஆடை அணிந்திருந்தால் அவரை ஒரு ஆண் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான் என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Haryana Chief Minister Manohar Lal Khattar says that women file false rape cases only to get back at estranged male friends.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X