ஹரியானா முதல்வரின் விவசாய சட்ட ஆதரவு நிகழ்ச்சி- போராடிய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை வீச்சு
சண்டிகர்: ஹரியானாவில் முதல்வர் கட்டாரின் விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக கிஷான் மகாபஞ்சாயத்து நடைபெற இருந்த கிராமத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைந்து போக செய்தனர்.
டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உ.பி. உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் 47 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி இப்போராட்டம் தொடருகிறது.

விவசாயிகளின் போராட்டம் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், கர்னால் மாவட்டம் கைமலா கிராமத்திம் கிஷான் மகா பஞ்சாய்த்து நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்திருந்தார்.
இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களால் விவசாயிகள் அடையும் நன்மைகளை விளக்க இந்த நிகழ்ச்சியை கட்டார் ஏற்பாடு செய்திருந்தார் கட்டார். இது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று நிகழ்ச்சி நடைபெற இருந்த கைமலா கிராமத்தை நோக்கி விவசாயிகள் திரண்டு சென்றனர். அங்கு கட்டார் நிகழ்ச்சி நடைபெற மேடையை சூறையாடினர். இதனையடுத்து போராட்டம் விவசாயிகளை தடுத்து நிறுத்த பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது:மத்திய அமைச்சர்கள் உறுதி.. -8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
ஆனால் போலீசார் தடையை மீறி விவசாயிகள் செல்ல முயன்றனர். இதனையடுத்து விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசினர். தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் அந்த கிராமப் பகுதியே பெரும் போர்க்களமாக மாறியது.