சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெக்கக்கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்.. ஓட்டு போட வந்த முதல்வர்.. சொன்ன மெசேஜ் தான் ஹைலைட்!

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானா முதல்வர் மனோகர் கட்டாரியா சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்களில் பயணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஹரியானா மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் இன்று நடந்து வருகிறது. து. இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 1.83 கோடி வாக்காளர்கள் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள்.

Haryana CM Manohar Lal casts his vote; reaches polling by bicycle

இங்கு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முதல்வர் மனோகர் கட்டாரியா தலைமையில் களம் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக வேலை செய்தது. இதேபோல் இந்திய தேசிய லோக் தளம் கட்சியும் அங்கு கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் போட்டி போட்டு பிரசாரம் செய்தனர். நேற்று முன்தினம் பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

ஐயா பாருங்க.. அம்மா பாருங்க.. இப்படி ஒரு தேர்தலை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா!ஐயா பாருங்க.. அம்மா பாருங்க.. இப்படி ஒரு தேர்தலை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா!

ஹரியானா முதல்வர் மனோகர் கட்டாரியா இன்று தேர்தல் நாளில் வித்தியாசமான முயற்சிகளை செய்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். சைக்களில் ஹாயாக ஓட்டியபடி மனோகர் கட்டாரியா வாக்குச்சாவடியை நோக்கி சென்றார். இதை பார்த்த பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

அவர் அண்ணாமலை படத்தில் வரும் ரஜினியை போல் சிரித்தபடி கையை அசைத்துக்கொண்டு கர்னாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். உள்ளே சென்று வாக்களித்துவிட்டு வந்த அவர், அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்களில் பயணிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

English summary
Haryana CM Manohar Lal casts his vote; reaches polling by bicycle, saying he wanted give message to people to protect environment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X