சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடிகாலை.. வீட்டிற்கு பால் பாக்கெட் போட வந்தவர்.. தம்பதியரை கண்ட அந்த காட்சி.. அலறி அடித்து ஓட்டம்!

தம்பதியை சுட்டு கொன்று, கொள்ளை அடித்து சென்றுள்ளது ஒரு கும்பல்

Google Oneindia Tamil News

சண்டிகர்: விடிகாலை நேரம்.. வீட்டிற்குள் பால் பாக்கெட் போட வந்த பால்காரர், அங்கு கண்ட காட்சியை கண்டு ஷாக் ஆகி அப்படியே உறைந்து நின்றார்!

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தம்பதி பெயர் சுக்பீர் - மோனிகா.. கல்யாணம் ஆகி 8 வருஷங்கள் ஆகிறது.. ஆனால், இவர்களுக்கு குழந்தை இல்லை.

 Haryana couple murder case issue

இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பால்காரர் வந்துள்ளார்.. பால் பாக்கெட் போடுவதற்காக ரொம்ப நேரமாக காலிங் பெல்லை அழுத்தி கொண்டே இருந்தார்.. ஆனால் யாருமே திறக்கவில்லை.. வழக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கும் கதவு, அன்றைய தினம் திறந்தே இருந்திருக்கிறது.. இதனால் சந்தேகம் கொண்ட பால்காரர், உள்ளே நுழைந்து சென்று பார்த்தார்.

அப்போது தம்பதி 2 பேருமே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.. இதை பார்த்து அதிர்ந்த அவர், உடனடியாக போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. உடனடியாக போலீசாரும் விரைந்துவந்து, சடலங்களை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர்.

பன்றிக் கறியை.. நல்லா இழுத்து கடித்து சுவைத்து சாப்பிடும் கமலா ஹாரிஸ்.. பன்றிக் கறியை.. நல்லா இழுத்து கடித்து சுவைத்து சாப்பிடும் கமலா ஹாரிஸ்.. "ஓ மை காட்" என வியப்பு!

அப்போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காமிராவையும் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், 4 பேர் பைக்கில் இவர்கள் வீட்டிற்கு வருவது பதிவாகி இருந்தது.. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேரும், கணவன் மனைவி 2 பேரையும் கட்டிப்போட்டுவிட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.. பின்னர், வீட்டில் இருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தும் சென்றுள்ளனர்.

உண்மையிலேயே இது நகை, பணத்துக்காக நடந்த கொலையா அல்லது போலீசாரின் கவனத்தை திசைத்திருப்ப நகையை கொண்டு போனார்களா என தெரியவில்லை.. வந்தவர்கள் யார் என்றும் தெரியவில்லை.. அதனால் விசாரணை தீவிரமாகி வருகிறது.

English summary
Haryana couple murder, police investigation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X