சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹரியானா முதல்வர் கட்டாரின் அமைச்சரவையில் ஒருவரை தவிர அனைத்து அமைச்சர்களும் படு தோல்வி!

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP's Manohar Lal Khattar to be sworn-in as the Cheif Minister of Haryana on tomorrow.

    சண்டிகர்: ஹரியானாவில் பாஜக முதல்வர் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவையில் அமைச்சர் அணில் விஜ் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவருமே பரிதாபமாக தோற்றுள்ளனர். நேற்று வெளியான ரிசல்ட் அந்த 8 அமைச்சர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தலைநகர் டெல்லிக்கு பக்கத்தில் உள்ள மாநிலம் ஹரியானா. இங்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்தது.

    மீண்டும் தேர்தல் கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்தது. ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 75ஐ இலக்காக நிர்ணயித்து பாஜக களப்பணி ஆற்றியது.

    இடமே தர கூடாது.. 17 பேரை மொத்தமாக வளைக்க திட்டமிடும் காங்.. ஹரியானாவில் களமிறங்கும் சோனியா!இடமே தர கூடாது.. 17 பேரை மொத்தமாக வளைக்க திட்டமிடும் காங்.. ஹரியானாவில் களமிறங்கும் சோனியா!

     40 இடங்களில் வெற்றி

    40 இடங்களில் வெற்றி

    தேர்தல் முடிந்ததும் வெளியான எக்ஸிட் போல் கூட பாஜகவுக்கு சாதகமாகவே வந்தன. இதனால் உற்சாகமாக இருந்த பாஜக தேர்தல் முடிவு வெளியான நேற்று அதிர்ச்சி அடைந்தது. ஏனெனில் அந்த கட்சி மெஜாரிட்டி பெறவில்லை. மொத்தம் உள்ள 90 இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

     ஜேஜேபி 10

    ஜேஜேபி 10

    காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்றது. துஷ்யத் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி(ஜேஜேபி கட்சி) 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தாள் ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி ஜேஜேபியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. பாஜகவுக்கு மொத்தம் 6 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்களும் தேவைப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

     இருவர் மட்டுமே வெற்றி

    இருவர் மட்டுமே வெற்றி

    இது ஒருபுறம் எனில் ஹரியானாவில் பாஜகவின் எட்டு அமைச்சர்கள் ஒபி தங்கார், கேப்டன் அபிமன்யூ, ராம் பிலாஸ் சர்மா, கவிதா ஜெயின், கிருஷ்ணன் லால் பன்வார், மணீஷ் க்ரோவர் மற்றும் கிருஷ்ணன் குமார் பேடி உள்ளிட்டோர் பரிதாபமாக தோல்வி அடைந்தனர். ஹரியானா அமைச்சரவையில் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அணில் விஜ் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

     ஜேஜேபி வேட்பாளர்

    ஜேஜேபி வேட்பாளர்

    ஹரியானாவின் பாஜக தலைவரான சுபாஷ் பராலா தேகனா தொகுதியில் ஜேஜேபி கட்சி வேட்பாளர் தேவேந்தர் சிங்கி பாப்லியிடம் 52 ஆயிரத்து 302 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அமைச்சர் கேப்டன் அபிமன்யூ ஜேஜேபி கட்சி வேட்பாளர் ராம் குமாரிடம் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

     கவிதா ஜெயின் தோல்வி

    கவிதா ஜெயின் தோல்வி

    பாஜக அமைச்சர் கிருஷ்ணன் குமார் ஜேஜேபி வேட்பாளர் ராம் கரணிடம் சோத்பாத் தொதியில் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கவிதா ஜெயின், காங்கிரஸ் கட்சியின் சுரேந்திர பவாரிடம் தோல்வி அடைந்தார்.

     சோகத்தில் பாஜகவினர்

    சோகத்தில் பாஜகவினர்

    இப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் என யார் ஆட்சியமைப்பதாக இருந்தாலும் ஜேஜேபி கட்சியின் ஆதரவு தேவை என்கிற நிலையில், குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஜேஜேபி ஆதரவு இல்லாமல் சாத்தியம் இல்லை என்ற நிலை உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் இழுபறி நீடித்து வரும் இந்த சூழ்நிலையில் 8 அமைச்சர்கள் தோற்றுப்போனது பாஜகவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    All of Khattar's ministers, except Anil Vij, lose seats in Haryana assembly elec
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X