சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலக் கொடுமை- லாக்டவுன் முடியப் போகுது.. சரக்கு உற்பத்தியை தொடங்குங்க.. ஹரியானா அரசு பகீர் உத்தரவு

Google Oneindia Tamil News

சண்டிகர்: கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் உள்ள லாக்டவுன் முடிவுக்கு வர உள்ளதால் உடனடியான மதுபான உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று மதுதயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு ஹரியானா மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    லாக்டவுன் இல்லாவிட்டால், 8.2 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர்

    நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவுப்படி 19-வது நாளாக லாக்டவுன் அமலில் உள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி வரை இந்த லாக்டவுன் அமலில் இருக்கும்.

    Haryana Govt orders to factories to Start the production of liquor

    அதேநேரத்தில் ஒடிஷா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களோ ஏப்ரல் 30-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளன. தமிழக அரசு நியமித்த மருத்துவர் ஆலோசனைக் குழுவும் 2 வார காலத்துக்கு லாக்டவுனை நீட்டிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.

    இருப்பினும் இது தொடர்பாக பிரதமர் மோடி எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. எப்படியும் லாக்டவுன் நீட்டிக்கப்படுகிற வாய்ப்புகளே அதிகம் என்பது பொதுவான கருத்து.

    ஒடிஷாவில் 300 படுக்கைகளுடன் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது 2 கொரோனா மருத்துவமனைகள் ஒடிஷாவில் 300 படுக்கைகளுடன் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது 2 கொரோனா மருத்துவமனைகள்

    இந்நிலையில் ஹரியானா மாநில அரசு, மதுபான தொழிற்சாலைகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதில் நாடு முழுவதும் அமலில் உள்ள லாக்டவுன் முடிவுக்கு வர உள்ளது.

    ஆகையால் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளில் மதுபான தயாரிப்பை உடனே தொடங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். இன்னொரு பக்கம் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாவோ, 2 வார காலத்துக்கு லாக்டவுனை நீட்டிக்கலாம். இது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பர் என கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Haryana govt issued order to factories to Start the production of liquor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X