சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது மட்டும் நடந்துவிட்டால்.. அரசியலை விட்டே விலகுகிறேன்.. நவ்ஜோத் சிங் சித்து திடீர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரக்யா சிங், உமா பாரதி போபாலில் ஒரு உருக்கமான சந்திப்பு-வீடியோ

    சண்டீகர்: உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் தோற்றுவிட்டால், தான் அரசியலை விட்டே விலகுவதாக நவ்ஜோத் சிங் சித்து திடீரென அறிவித்துள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் பஞ்சாப் மாநில அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.

    இந்த நிலையில் அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிடும் ராகுல்காந்தி நிச்சயம் தோற்பார் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

    வாரணாசி தேர்தலில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய தமிழக விவசாயிகள்..போலீஸ் மிரட்டுவதாக புகார்வாரணாசி தேர்தலில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய தமிழக விவசாயிகள்..போலீஸ் மிரட்டுவதாக புகார்

    காங்கிரஸ் ஆட்சி

    காங்கிரஸ் ஆட்சி

    இது குறித்து அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில் கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில்லை என பாஜக கூறுவதை ஏற்க முடியாது. பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சியில்தான் வளர்ச்சி அடைந்தது.

    திறமை

    திறமை

    நாட்டில் குண்டூசி முதல் விமானம் வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவையே. கணவர் ராஜீவ்காந்தி இறந்தபிறகு, கட்சியை சோனியா காந்தி திறமையாக நடத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    சோனியாகாந்தி

    சோனியாகாந்தி

    பாஜகவுக்கு விசுவாசமாக இருந்தால் அவர்களை தேசியவாதி என்பதும் பாஜகவை விட்டு விலகினால் அவர்களை தேசவிரோதி என பாஜக கூறுவது தெரிந்த விஷயம்தானே. ரேபரேலியில் எம்பியாக உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியிடம் போய் தேசியப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள்.

    ரபேல் ஒப்பந்தம்

    ரபேல் ஒப்பந்தம்

    பாஜகவினர் கூறுவது போல் அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தோற்று போக மாட்டார். ஒரு வேளை தோற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என சித்து சவால் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க ரபேல் ஒப்பந்தம் ஒன்றே போதும் என்றும் சித்து தெரிவித்தார்.

    English summary
    Navjot Singh Sidhu said he would quit politics if Congress chief Rahul Gandhi lost the Lok Sabha election from Amethi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X