சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகளின் போராட்டத்தை குறிவைத்து.. பஞ்சாப் இடைதரகர்களுக்கு எதிராக ரெய்டு: அமரீந்தர் சிங்

Google Oneindia Tamil News

சண்டிகர்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் அர்ஹித்தாஸ் எனப்படும் கமிஷன் முகவர்களை மத்திய அரசு வருமான வரித்துறை ரெய்டு மூலம் மிரட்ட முயற்சிப்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அந்த சட்டத்தில் விலைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு தரும் சரத்து இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அரசு உறுதி அளித்துள்ள போதிலும் சட்டத்தில் சேர்க்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தது.

இதேபோல் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக தேவைப்படும் வணிகர்களுக்கு விற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளது. விளைபொருட்களை விற்பது குறித்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மண்டிகளை ஒழித்துவிட்டு ஒரு சில கார்ப்பரேட்களுக்கு சாதகமாக மாற்றவே இச்சட்டம் இருக்கும் என்று குற்றம்சாட்டி வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

கடும் குளிர்

கடும் குளிர்

குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் கடும் போராட்டங்கள் நடந்து வருகிறது. பல மாநில விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 24 நாட்களாக போராடி வருகிறார்கள்.

ரெய்டு ஏன்

ரெய்டு ஏன்

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் அர்ஹித்தாஸ் எனப்படும் கமிஷன் முகவர்களை மத்திய அரசு வருமான வரித்துறை ரெய்டு மூலம் மிரட்ட முயற்சிப்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்கள்.

மத்திய அரசுககு வார்னிங்

மத்திய அரசுககு வார்னிங்

இது தொடர்பாக முதல்வர் கேப்ட்ன் அம்ரீந்தர் சிங் கூறுகையில். பஞ்சாப் ஆர்தியாக்களுக்கு எதிரான வருமான வரித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் ஜனநாயக உரிமையைத் தடுப்பதற்கான ஒரு தெளிவான அழுத்தம் தந்திரமாக தரப்படுகிறது. இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் ஆளும் பாஜகவுக்கு எதிராக பின்விளைவை தரும். பஞ்சாப் முழுவதும் மொத்தம் 14 ஆர்தியாக்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பலவீனப்படுத்த முயற்சி

பலவீனப்படுத்த முயற்சி

வேளாண் சட்டங்களுக்கு எதிரான பெரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு விவசாயிகளை வலியுறுத்தவும் , தவறாக வழிநடத்துவதற்கும், பிளவுபடுத்துவதற்கான முயற்சிகள் தோற்ற நிலையில், மத்திய அரசு இப்போது போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது.

பல இடங்களில் ரெய்டு

பல இடங்களில் ரெய்டு

இடைத்தரகர்களுக்கு (ஆர்தித்யாக்கள்) எதிரான வருமான வரி நோட்டீஸ்களை வெளியிட்ட நான்கு நாட்களுக்குள் பஞ்சாபின் பல முக்கிய ஆர்தித்யாக்களின் வளாகத்தில் வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டன. "விவசாயிகளின் எதிர்ப்பை பலவீனமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தான் இது என அம்ரீந்தர் சிங் தெரிவித்தார்.

English summary
Punjab Chief Minister Amarinder Singh on Saturday lashed out at the centre, the income tax raids against some Punjab Arhtiyas was an obvious pressure tactic to curb their democratic right and freedom said these oppressive actions will backfire against the ruling BJP. A total of 14 Arhtiyas across Punjab have received notices from the IT department, his office said in statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X