India
  • search
சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கவர்ச்சி" பெண்.. ஹோட்டலில் ரூம் போட்டு.. கதற கதற சீரழித்து.. அலறியது யார் தெரியுமா.. கலிகாலம்

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹோட்டல் ரூமில் ஜோடி ஒன்று தங்கியிருந்த நிலையில், திடீரென அலறல் சத்தம் கேட்டது.. அப்படி கதறி துடித்தது ஒரு பெண் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.. அப்படி அபாய கூச்சல் போட்டது ஒரு இளைஞர்..

பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. பல பரிதாப பெண்கள் குடும்ப சூழலில் சிக்கி கொண்டுள்ளனர்..

ஒரு மாணவி.. பப்.. எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர்.. இந்தியாவையே உலுக்கிய கூட்டு வன்புணர்வு! கொடூர பின்னணி! ஒரு மாணவி.. பப்.. எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர்.. இந்தியாவையே உலுக்கிய கூட்டு வன்புணர்வு! கொடூர பின்னணி!

மேலும் சிலபெண்கள் வாயில்லா பூச்சிகளாய் தவித்து வந்த நிலையில், தற்கொலை முடிவையும் எடுத்து வருகின்றனர்.

லாட்ஜ்

லாட்ஜ்

சில பெண்களோ, நேரடியாகவே குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் சில விநோதங்களும், விசித்திரங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கின்றன... அப்படித்தான் அரியானா மாநிலத்திலும் நடந்துள்ளது.. அங்குள் கர்னல் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார்.. இவருக்கு 27 வயதாகிறது.. இவர் திடீரென போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகாரை கொண்டு போனார்.. அந்த புகாரை பார்த்ததுமே, போலீஸ்காரர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

அந்த புகாரின் சுருக்கம் இதுதான்: "எனக்கு 27 வயதாகிறது.. கர்னல் பகுதியில் இருக்கும் ராஜீவ் நகரில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தேன். சோஷியல் மீடியாவில் நிறைய நேரம் ஆக்டிவ்வாக இருப்பேன்.. அந்த வகையில், இளம்பெண் ஒருவர் எனக்கு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஆனார்.. கவர்ச்சி மிகுந்த பேச்சால் என்னை ஈர்த்தார்.. இருவரும் நட்புடன் பேசினோம்.. பிறகு போன்நம்பர்களை பரிமாறிக் கொண்டோம்.. சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் எனக்கு போன் செய்தார்.

 ஹோட்டல் ரூம்

ஹோட்டல் ரூம்

என்னை ஒரு குறிப்பிட்ட ஹோட்டலுக்கு வர சொல்லி கூப்பிட்டார்.. நானும் அந்த பெண் சொன்ன ஹோட்டலுக்கு போனேன்.. அதே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினோம்... 2 பேரும் தண்ணி அடித்தோம்.. கொஞ்ச நேரத்தில் எனக்கு போதை அதிகமாகிவிட்டது.. அப்போது அந்த ஹோட்டலுக்கு வந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் என்னை கடுமையாக தாக்கினார்கள். அப்போதுதான், அந்த பெண் தனியாக வரவில்லை, தன்னுடன் ஆட்களை அழைத்து வந்திருப்பது தெரிந்து அதிர்ந்து போய்விட்டேன்..

 ஐயோ.. காப்பாற்றுங்கள்

ஐயோ.. காப்பாற்றுங்கள்

என்னை தாக்கிய பிறகு, அந்தப்பெண் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்... அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டார்.. தொடர்ந்து அந்த ஹோட்டலில் என்னை அடைத்து வைத்து சித்திரவதை செய்தார்கள்... ஆனாலும், ஒருவழியாக நான் அங்கிருந்து தப்பித்து ஓடிவந்து விட்டேன். என்னை காப்பாற்றுங்கள்.. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.. அந்த பெண் மீதும், அவருடன் வந்த அந்த நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுங்கள்" என்று தெரிவித்திருந்தார்..

 சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

இப்போது இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த பெண் யார் என்று இதுவரை தெரியவில்லை.. இதுபோன்ற மோசடி பேர்வழிகள், பேஸ்புக்கில் சொந்த பெயரில் இருக்கவும் வாய்ப்பில்லை என்பதால், அவரை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. எனினும், ஹோட்டல் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு, குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இளம்பெண்ணா

இளம்பெண்ணா

இதுகுறித்து, வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் பவன் மாலிக் சொல்லும்போது, இளைஞர் தந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.. விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு இளைஞரை, வலுக்கட்டாயமாக ரூமுக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்து, அதை வீடியோவும் எடுத்தது ஒரு இளம் பெண்ணா? என்ற ஆச்சரியம் அப்பகுதி மக்களை ஆழ்த்தி வருகிறது.. கலிகாலம்!

English summary
innovative incident in haryaya hotel room and young man complaint against woman ஹோட்டலில் இளைஞரை பலாத்காரம் செய்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X