சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜார்க்கண்ட் தேர்தல்: மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் .. பாலம் தகர்ப்பு.. மக்கள் பீதி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜார்க்கண்ட் தேர்தல்: தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு|BJP May Emerge As Single Largest Party In Jharkhand

    சண்டிகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில் அங்கு மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் இன்று துவங்கியது. ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன.முதற்கட்டமாக 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

    Jharkhand Assembly Polls: Naxal blown up a bridge in the Gumla area

    காலை 7 மணிக்கு இதற்கான வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. இன்று நடைபெறும் தேர்தல் அதிகம் நக்சல் பிரச்சனை உள்ள பகுதிகள் ஆகும். லத்தேர், லோகர்தாகா, சட்டாரா, கும்லா, மணிகா, பங்கி, டால்டோன்காஞ்ச் ஆகிய முக்கிய மாவட்டங்களில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கும்லா தொகுதியில் உள்ள பாலம் ஒன்றை நக்சல்கள் வெடி வைத்து தகர்த்தனர். வாக்குப்பதிவை தடுக்கும் வகையில் நக்சல்கள் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். இந்த பாலத்தை தாண்டித்தான் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வாக்களிக்க வேண்டும்.

    திரும்பி வந்த வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. இந்திய வானிலை மையம்திரும்பி வந்த வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. இந்திய வானிலை மையம்

    அதை தடுக்கும் பொருட்டு மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து அங்கு துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு களமிறக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    English summary
    Jharkhand Assembly Polls: Naxal blown up a bridge in the Gumla area with using a Bomb.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X