சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு - 65% வாக்குகள் பதிவு!

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது.

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை சில இடங்களிலும் பல பகுதிகளில் மாலை 5 மணி வரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இன்றைய வாக்குப் பதிவில் சுமார் 65% வாக்குகள் பதிவாகின.

ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலை தொடந்து தற்போது ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

Jharkhand Assembly Polls: Voting for 15 constituencies in 4th phase starts today

டிசம்பர் 23-ல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜார்க்கண்ட்டில் மொத்தம் 37,83,055 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் பெண் வாக்காளர்கள் மொத்தம் 18,01,356 இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி, நக்சல் பிரச்சனை காரணமாகவும் இந்த தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற தேர்தல் அதிகம் நக்சல் பிரச்சனை உள்ள பகுதிகள் ஆகும். ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று 4ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக 3ம் கட்ட தேர்தல் டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது. 3ம் கட்டத்தில் தலைநகர் ராஞ்சி, ராம்கர், ஹசாரிபாக், கோடேர்மா, சத்ரா, கிரிடி மற்றும் சரிகேலா-கர்சவன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 4வது கட்ட தேர்தல் தன்பத், தியோகர், கரித், பக்ரோ ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது.

பல இடங்களில் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. சில இடங்களில் மாலை 3 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இன்று சுமார் 65% வாக்குகள் பதிவாகி இருந்தன

English summary
Jharkhand Assembly Polls: Voting for 15 constituencies in 4th phase starts today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X