சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி இப்படி நடக்க கூடாது.. ஜார்க்கண்டை வெல்ல வேண்டும்.. மொத்தமாக இறங்கும் பாஜக தலைகள்.. ஆனால்?

ஜார்க்கண்ட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக அங்கு மகாராஷ்டிரா போலவே அரசியல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜார்க்கண்ட் தேர்தல்: தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு|BJP May Emerge As Single Largest Party In Jharkhand

    சண்டிகர்: ஜார்க்கண்ட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக அங்கு மகாராஷ்டிரா போலவே அரசியல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அங்கு இன்னும் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் துவங்க உள்ளது.

    ஹரியானா மாநில தேர்தல் முடிந்து அங்கு பாஜக - ஜேஜேபி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில்தான் புதிய வரவாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30-ந் தேதி முதல் டிசம்பர் 19 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    சிறிய மாநிலம் என்றாலும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. அங்கு பெரும்பான்மைக்கு 41 எம்.எல்.ஏக்கள் தேவை.

    மகாராஷ்டிரா ஆட்சி

    மகாராஷ்டிரா ஆட்சி

    மகாராஷ்டிராவில் இப்போதுதான் சட்டசபை தேர்தல் முடிந்து அங்கு ஆட்சி அமைகிறது. அங்கு சிவசேனா உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க பாஜக செய்த முயற்சிகள் எல்லாம் கடும் தோல்வியை தழுவியது. இதனால் பாஜக தற்போது மற்ற மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க, அல்லது ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக முயன்று வருகிறது.

    அடுத்த தேர்தல்

    அடுத்த தேர்தல்

    இந்த நிலையில்தான் தற்போது ஜார்க்கண்டில் தேர்தல் வருகிறது. ஜார்கண்டில் தற்போது பாஜகவின் ரகுபர் தாஸ் முதல்வராக இருக்கிறார். அங்கு பாஜக கட்சிக்கு ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலையும் இவர்கள் இருவரும் ஒன்றாக எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள்.

    ஜார்க்கண்ட் அரசியல் எப்படி

    ஜார்க்கண்ட் அரசியல் எப்படி

    பொதுவாக ஜார்க்கண்ட் அரசியல் ரீதியாக நிறைய வித்தியாசமான முடிவுகளை கொடுக்க கூடியது. அதாவது 2005ல் இருந்து அங்கு நடந்து இருக்கும் மூன்று சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் தனியாக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் எப்போதும் தனிப்பெரும்பான்மை பெற்றது கிடையாது.

    ஆட்சி அமையும்

    ஆட்சி அமையும்

    அதன்பின்தான் அங்கு ஆட்சியும் அமைந்துள்ளது. தற்போது பாஜகவிற்கு ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சி அப்படிதான் ஆதரவு அளித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சி ஆகிய கட்சிகள்தான் முக்கிய கட்சிகள் ஆகும்.

    காங்கிரஸ் எப்படி

    காங்கிரஸ் எப்படி

    இதில் காங்கிரஸ் ஏற்கனவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் அங்கு கூட்டணி வைத்துவிட்டது. இவர்களின் கூட்டணி காரணமாக அந்த மாநிலத்தின் மாபெரும் எதிர்க்கட்சியாக தற்போது காங்கிரஸ் உருவெடுத்து உள்ளது. கடந்த தேர்தலை வைத்து பார்க்கையில் இவர்களிடம் 51% வாக்குகள் இருக்கிறது.

    பாஜக தனிமை

    பாஜக தனிமை

    இன்னொரு பக்கம் பாஜக தனியாக இருக்கிறது. பாஜக தேர்தலுக்கு பின் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சி ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இணைந்தால் கடந்த தேர்தலின்படி 48 சதவிகித வாக்குகள் இவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    என்ன கணிப்பு

    என்ன கணிப்பு

    இந்த நிலையில்தான் இன்று ஜார்க்கண்ட் மாநில தேர்தல் குறித்த சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியானது. அதன்படி அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. 81 இடங்களில் பாஜக 38 இடங்கள் வரை அதிகபட்சம் பெறலாம் என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 38 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளது.

    கூட்டணி வைக்க முயற்சி

    கூட்டணி வைக்க முயற்சி

    இதனால் பாஜக தற்போது அங்கிருக்கும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வருகிறது. மகாராஷ்டிரா போல ஆகிவிட கூடாது என்று மிக தீவிரமாக பாஜக முயன்று வருகிறது. ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடன்ட்ஸ் யூனியன் கட்சிக்கு துணை முதல்வர் பதவியை அளிக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது.

    சூழல் எப்படி

    சூழல் எப்படி

    பெரும்பாலும் ஜார்க்கண்டில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிதான் உருவாகும் என்கிறார்கள். அங்கு காங்கிரஸ் இன்னொரு பக்கம் தீவிரமாக தேர்தலுக்கு பின் புதிய கட்சிகளை கூட்டணிக்கு இழுக்க முயன்று வருகிறது. இதனால் ஜார்க்கண்டில் இன்னொரு மகாராஷ்டிரா அரசியல் சூழல் உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாஜக உறுதி

    பாஜக உறுதி

    இதனால் இப்போதே தேர்தல் பணியாளர்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முடுக்கிவிட்டுள்ளார். அங்கு என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். கண்டிப்பாக தேர்தலில் வெல்ல வேண்டும். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று அவர் உறுதியாக கட்டளையிட்டு இருக்கிறார்.

    English summary
    Jharkhand Assembly Polls: BJP plans to win at least this state after Maharashtra's flop show.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X