இப்படி எல்லாம் கூட பண்ணுவாங்களா! ஜெயிலில் அரண்டு போய் நின்ற அதிகாரிகள்.. தொக்காக மாட்டிய எஸ்.பி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறையில் கைதிகளுக்கு 50 கிராமுக்கு குறைவான எடையில் சப்பாத்தி வழங்கியதோடு, எலுமிச்சை பழம் வாங்காமல் போலியாக கணக்கு காட்டிய சிறை கண்காணிப்பாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோடைக்காலம் துவங்கிய நிலையில் இந்தியாவில் வெயில் அதிகமாக உள்ளது. கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வெப்பம் அதிகரிக்கும். பல்வேறு மாநிலங்களில் அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடை வெயில் அதிகரிப்பால் நாட்டில் இயற்கை பானம், பழச்சாறுகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சில இடங்களில் எலுமிச்சை பழங்களின் விலைகள் அதிகரித்து உள்ளன.
எப்படியாவது பேசிடனும்.. 3 பக்கமும் நைசாக நெருக்கும் தலைகள்.. ஸ்டாலின் கையில்
இந்த விலை உயர்வை பயன்படுத்தி பஞ்சாப் சிறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளார். முறைகேடு, ஊழல் செய்தவருக்கு சிறை தண்டனை விதிக்கும் நிலையில் சிறையில் பணியாற்றும் அதிகாரியே குற்றம் செய்திருக்கும் இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

மோசடி புகார்
பஞ்சாப் மாநிலம் கபுர்தாலா மாதிரி சிறையில் சூப்பிரண்டாக இருப்பர் குர்னாம் லால். இவர் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு பொருட்கள் வாங்குவதில் மோசடி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி விசாரணை நடத்த சிறைத்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைனிஸ் உத்தரவிட்டார்.

விசாரணை
இந்த உத்தரவை தொடர்ந்து சிறைத்துறை ஏடிஜிபி வீரேந்திர குமார் 2 பேரை விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்தார். இந்த அதிகாரிகள் சிறைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்கள் வாங்கியதாக இருந்த பில்களை ஆய்வு செய்தனர். மேலும் சிறையில் வழங்கும் உணவு குறித்து அவர்கள் கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

எலுமிச்சை மோசடி
அப்போது சிறையில் வழங்கப்பட்ட எந்த உணவிலும் எலுமிச்சைபழம் சேர்க்கபடவி்லை என்பது தெரியவந்தது. ஆனால் கிலோ ரூ.200 என்ற அளவில் விற்கும் நிலையில் இதுவரை 50 கிலோ எலுமிச்சை பழங்கள் வாங்கியதாகவும் போலியாக சிறை சூப்பிரண்டு குர்னாம் லால் கணக்கு காட்டியது தெரியவந்தது.

சப்பாத்தி எடை குறைவு
மேலும் சிறையில் உணவுகள் தரமற்ற நிலையில் இருப்பதையும், ஒவ்வொரு சப்பாத்தியும் 50 கிராம் எடைக்கு கீழ் இருப்பதும் தெரியவந்தது. இதனால் சப்பாத்திக்கான மாவிலும் முறைகேடு நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி விசாரணை அதிகாரிகள் சிறைத்துறை ஏடிஜிபி வீரேந்திர குமாருக்கு அறிக்கை அளித்தனர். இதையடுத்து சிறை சூப்பிரண்டு குர்னாம் லால் சஸ்பெண் செய்யப்பட்டார்.