சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவாக்சின் தடுப்பு மருந்து போட்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா வைரஸ்

Google Oneindia Tamil News

சண்டிகர்: கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் 96 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியது.

Minister Anil Vij tests corona positive despite he had taken Covaxin

இந்த மருந்தை மனிதர்கள் செலுத்தி பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த நவம்பர் 20-ஆம் தேதி ஹரியானாவில் தொடங்கியது. முதல் தடுப்பு மருந்தை ஹரியானா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜிக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதை அமைச்சர் உறுதி செய்தார்.

இதுகுறித்து அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் அம்பாலாவில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

என்னுடன் அண்மைக்காலமாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Haryana Health Minister Anil Vij tests corona positive despite he had taken Covaxin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X