சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கலக்கும் ஹரியானா.. கொரோனா பாதிப்பை அசால்டாக டீல் செய்கிறது.. அசத்தும் புள்ளிவிவரம்

Google Oneindia Tamil News

சண்டிகர்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல மாநிலங்களும் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், ஹரியானா மாநில அரசு அதை திறமையாக சமாளித்து வருவதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

Recommended Video

    Modi speech | Turn off your lights in home, Modi says

    கொரோனா பாதிப்பால் இந்தியா தற்போது லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் தமிழகத்தில் குறைவான பாதிப்பு இருந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பாதித்தவர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

    423 நோயாளிகளுடன் மகாராஷ்டிரா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் 42 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    இதல்லவோ தொண்டுள்ளம்... கொரோனா வார்டில் பணியமர்த்தக் கோரும் செவிலியர் இதல்லவோ தொண்டுள்ளம்... கொரோனா வார்டில் பணியமர்த்தக் கோரும் செவிலியர்

    தமிழகம்

    தமிழகம்

    தமிழகத்தைப் பொறுத்தளவில் 309 பேர் பாதிக்கப்பட்டு அதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் 286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் குணமாகி உள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர். அதேநேரம் ஹரியானா புள்ளிவிவரங்கள் வியக்க வைக்கின்றன. அங்கு மொத்தம் 49 பேர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள நிலையில், அதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு என்பது அங்கு எதுவும் கிடையாது.

    பஞ்சாப் மோசம்

    பஞ்சாப் மோசம்

    அண்டை மாநிலமான பஞ்சாபில் 47 பேர் பாதிக்கப்பட்டு அதில் ஒருவர்தான் குணம் அடைந்துள்ளார். 5 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 293 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டு உள்ளனர். அதில் 6 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஹரியானா அசத்தல்

    ஹரியானா அசத்தல்

    ஆனால் இந்த மாநிலங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஹரியானா, இந்த விஷயத்தை சிறப்பாக கையாண்டு வருகிறது. ஏனெனில் நோயாளி எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது இந்த மாநிலத்தில் மட்டும்தான்.
    அந்தவகையில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு, சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சிறப்பான மருத்துவ வசதிகளையும் கொடுத்துள்ளதை மறுக்க முடியாது.

    சர்ச்சையும் உண்டு

    சர்ச்சையும் உண்டு

    அதேநேரம், நம்மூரில் சென்னை வெள்ள பாதிப்பின் போது நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதைபோல ஹரியானாவில் சானிட்டைசர்கள் உள்ளிட்ட உதவி பொருட்களில் மனோகர் லால் கட்டார் உருவப்படம் பொரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. விமர்சனங்களையடுத்து, அதுபோல படம் இடம் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Haryana government is doing very good job to contain coronavirus spread, and more than 50 percentage of the patients cured and have returned to their houses.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X