சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

19 வயது இந்து பெண்ணை மணக்க.. மதம் மாறிய முஸ்லிம் இளைஞர்.. காதல்னா சும்மாவா..!

இந்து பெண்ணுக்காக மதம் மாறினார் முஸ்லிம் இளைஞர்

Google Oneindia Tamil News

சண்டிகர்: 19 வயது இந்து பெண் ஒருவரை கல்யாணம் செய்து கொள்வதற்காக, 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் மதம் மாறி உள்ளார்.. இந்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது!

கல்யாணம் செய்து கொள்வதற்காக நடைபெறும் மதமாற்றத்தை லவ் ஜிகாத் என்று சிலர் கூறி வருகின்றனர்.. இந்த விவகாரம் சில மாதங்களாகவே நாடு முழுவதும் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

கல்யாணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று ஒரு வழக்கில் அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.. இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவற்றில் லவ் ஜிகாதுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

 நிகிதா

நிகிதா

முன்னதாக, சில நாட்களுக்கு முன்புகூட ஹரியானாவில் ஒரு கோர சம்பவம் நடந்தது.. பரிதாபாத் மாவட்டத்தின், பல்லப்கர் என்ற இடத்தில் 21 வயது பெண் நிகிதா என்பவர், காலேஜில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி கடத்த முயன்றனர்.. ஆனால் நிகிதா இதற்கு மறுக்கவும், அவரை அங்கேயே துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வன்முறை

வன்முறை

எனவே, பெண்கள் மீது தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும், லவ் ஜிகாத் தலைதூக்குவதால் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

மதம்

மதம்

லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்ற 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு ஹரியானா உள்துறை அமைச்சகமும் தெரிவித்திருந்தது. இதுபோன்ற சூழலில்தான், இன்னொரு சம்பவம் அதே ஹரியானாவில் நடந்துள்ளது.. 19 வயது இந்து பெண் ஒருவரை கல்யாணம் செய்து கொள்ள மதம் மாறியுள்ளார் 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர்.. மேலும் இந்து முறைப்படி கடந்த 9-ம் தேதியும் இவர்கள் கல்யாணம் செய்து கொண்டனர். அந்த இளைஞர் ஒரு பிரைவேட் கம்பெனில் மாதம் 15,000 ரூபாய் சம்பாதிக்கிறாராம்..

முறையீடு

முறையீடு

இந்த திருமணத்தை மணமகன் வீட்டில் ஏற்று கொண்டனர்.. விஷயம் தெரிந்த பெண் வீட்டினரோ, தம்பதிக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.. இதனால், தம்பதி இருவரும், தங்களது உயிருக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா கோர்ட்டில் முறையிட்டனர்.

 மறுப்பு

மறுப்பு

இந்த வழக்கு விசாரணையின்போது, கோர்ட்டின் அறிவுறுத்தலின்பேரில் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனிடையே, நவம்பர் 11-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது, பெண்ணை சந்திக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர்.. ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு சொல்லியதும் இங்கு நினைவுகூரத்தக்கது!

English summary
Muslim Youth has converted to marry Hindu girl in Haryana
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X