• search
சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடுத்த "தலைவலி".. அப்செட்டில் முதல்வர்.. "வெயிட்" போஸ்ட்டில் சித்து.. பஞ்சாப்பில் தொடரும் பஞ்சாயத்து

Google Oneindia Tamil News

சண்டிகர்: டெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.. அதேசமயம், சித்துவின் நியமனம் குறித்து, முதல்வர் நவ்ஜோத் சிங் தரப்பு அதிருப்தியில் உள்ளது.. இந்த நியமனம் குறித்து சோனியாவுக்கு 10 எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி இருக்கிறார்களாம்.

அடுத்த வருடம் பஞ்சாப்பில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் தயாராகி வருகிறது... ஆனாலும், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாசமாகவே நீடித்து வருகிறது..

முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கும் சித்துவுக்கும் இடையே அருப்தியும், சர்ச்சைகளும், எழுந்து வருகின்றன.. முதல்வருக்கு எதிராக சித்து போர்க்கொடி உயர்த்தி வந்ததுடன், அவரை கடுமையாகவும் விமர்சித்து வந்தார்..

அமரீந்தர் சிங் எதிர்ப்புக்கு மத்தியில்.. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்! அமரீந்தர் சிங் எதிர்ப்புக்கு மத்தியில்.. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

பலவீனம்

பலவீனம்

இப்படி காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசலானது, அந்த கட்சியை மேலும் பலவீனமாக்கிவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என இரண்டாக பிரிந்து செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.. இது மேலும் அம்மாநிலத்தில் உச்சக்கட்ட பூசலுக்கு வழிவகுத்தது.

அறிவிப்பு

அறிவிப்பு

இப்படியே போனால் நிலைமை சரியாகாது என்று உணர்ந்த கட்சி மேலிடம், இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர விரும்பியது.. அதற்காகவே இம்மாநில பிரச்சனையிலும் தலையிட்டது.. இறுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, அமரிந்தர் சிங்கும், சித்துவும் ஆளுக்கொரு பக்கம் தனித்தனியாக சந்தித்து பேசினர்...

ஆலோசனை

ஆலோசனை

இதையடுத்து, அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரை சித்து சந்தித்து ஆலோசித்தார்.. இவர்கள் இப்படி சந்தித்து பேசிய உடனேயே, மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக சித்துதான் நியமனம் செய்யப்படுவார் என்று ஒரு தகவல் வெளியானது.. அதன்படியே, காங்கிரஸ் தலைவராகி உள்ளார் சித்து.. மாநிலத்தில் உட்கட்சிபூசலை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலேயே சித்து நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 முக்கிய முடிவுகள்

முக்கிய முடிவுகள்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதேபோல, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சங்கத் சிங் கில்ஸியான், சுக்விந்தர் சிங் டேனி, பவண் கோயல், குல்ஜித் சிங் நாக்ரா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்... இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு உட்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க சித்துவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

நியமனம்

நியமனம்

சித்து நியமனம் செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் மேளதாளம் வாசித்தும், ஸ்வீட் வழங்கியும் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.. பாட்டியாலாவில் உள்ள குருகுவாராவிற்கு சென்று வழிபட்ட சித்து, வீடு திரும்பியபோது ஆதரவாளர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஆனால், அம்ரிந்தர் சிங் கடுமையான அப்செடில் உள்ளதாக தெரிகிறது.. ஏற்கனவே இவர்களுக்குள் தகராறு முற்றி வந்த நிலையில், சித்துவின் நியமனம் மேலும் அதிருப்தியை தந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில், கட்சியை வலிமையுடன் வளர்த்த அம்ரிந்தர் சிங்கின் கடுமையான உழைப்பை சுட்டிக் காட்டி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு 10 எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி இருக்கிறார்களாம்..

சித்து

சித்து

மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டாலும், அடுத்த வருடம் நடக்க போகும் சட்டப்பேரவை தேர்தலின்போது, முதல்வர் வேட்பாளராக அமரிந்தர்சிங் தான் முன்னிறுத்தப்படுவார் என்றே தெரிகிறது.. ஆனால், வேட்பாளர் தேர்வு குறித்த முக்கிய முடிவு எடுக்கும் உரிமை சித்துவுக்கு வழங்கப்பட்டால், மறுபடியும் இந்த பஞ்சாப்பில் பஞ்சாயத்து மேலும் தொடரும் என்றே தெரிகிறது... பார்ப்போம்!

English summary
Navjot Singh Sidhu Punjab Congress and Chief Amarinder singh is upset
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X