டுவிஸ்டு.. அரியானாவிலும் பாஜகவுக்கு அடி! காங்கிரஸ் ஆட்சியாம் - சக்சஸான கருத்துக்கணிப்பு நிறுவனமாச்சே
சண்டிகர்: அரியானாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என்று ஸ்மால் பாக்ஸ் இந்தியா கருத்துக்கணிப்பு தெரிவித்து இருக்கிறது.
90 தொகுதிகளை கொண்ட அரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 41 இடங்களிலும், அதன் கூட்டணிகளான ஜனாயக் ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளம், அரியானா லோகித் கட்சி தலா 1 இடங்களிலும் வெற்றிபெற்றன.

காங்கிரஸ் கட்சி 30 இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றிபெற்றன. பாஜக பெரும்பான்மை பலத்தை பெறாவிடாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், அரியானா பாஜக அரசின் ஆட்சிகாலம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு அரியானாவில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக ஸ்மால் பாக்ஸ் இந்தியா என்ற நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
ஆளும் கட்சியான பாஜக 28 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்றும், ஜனாயக் ஜனதா கட்சி 6 இடங்களிலும் இந்திய தேசிய லோக்தளம் 2 இடங்களிலும், இதர 3 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளையும், பாஜக 33 சதவீத வாக்குகளையும், ஜேஜேபி 11 சதவீதத்தையும் வாக்குகளையும், இந்திய தேசிய லோக் தளம் 10 சதவீத வாக்குகளையும், இதர 7 சதவீத வாக்குகளையும் பெறும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதே நிறுவனம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. அதில் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் எனவும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் எனவும் தெரிவித்து இருந்தது. இதற்கு முன் குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளையும் இந்த நிறுவனம் துல்லியமாக கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications