சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

60 வருட நாடாளுமன்ற சரித்திரத்தில் நடக்காதது.. 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள்.. மோடி

Google Oneindia Tamil News

சண்டிகர்: பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற இந்த 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களும் வளர்ச்சியும், நம்பிக்கையும் நிகழ்ந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள ரோடக் நகரில் பாஜக சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், "2 வது முறையாக ஆட்சியமைத்த பின் முதல் 100 நாள்களில், நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களும் வளர்ச்சியும், நம்பிக்கையும் நிகழ்ந்திருக்கிறது. இந்த 100 நாளில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் ஏராளமான மக்கள் நலப்பணிகளுக்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு முன்பு கடந்த 60 ஆண்டுகளில் எந்த கூட்டத்தொடரிலும் இப்படி சட்ட மசோதக்கள் நிறைவேற்றம் நடந்தது இல்லை.

 pm modi marked first 100 days with development and big changes

இந்த 100 நாளில், வேளாண்மை, தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 100 நாள்களில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துணிச்சலான முடிவுகளுக்கு 130 கோடி மக்களும் ஆதரவாக இருந்தனர். இந்த முடிவுகள் வருங்காலத்தில் பலன் அளிக்கும்.

பாசமான தங்கை தமிழிசையை வழி அனுப்பி வைத்த தமிழக அமைச்சர்கள்.. தெலுங்கானாவில் உருக்கம்பாசமான தங்கை தமிழிசையை வழி அனுப்பி வைத்த தமிழக அமைச்சர்கள்.. தெலுங்கானாவில் உருக்கம்

சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதைப் பார்க்க நாட்டு மக்கள் அனைவரும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்த போது, ஒற்றுமையை அறிந்தேன். விளையாட்டு வீரர்களைப் பற்றி பேசுவதைப் போல, இஸ்ரோவைப் பற்றியும் இப்போது பேச வேண்டும்" என்று மோடி கூறினார்.

இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம், அதிக அபராதம் விதிக்க வழி வகை செய்யும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட நான்கு முக்கிய மசோதக்களை நிறைவேற்றி உள்ளது. இந்த நான்குமே இந்தியாவில் வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடியவை ஆகும்.

பிரதமர் மோடி தலைமையிலான 2.0 அரசில் அமைச்சர்கள் அனைவரும் இந்த 10 நாளில் செய்த சாதனைகள் மற்றும் பணிகள் குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசு உத்தர்விட்டுள்ளது. 100 நாளில் செய்த சாதனைகள் குறீத்து நாட்டின் முக்கிய நகரஙகளில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர்கள் விளக்க உள்ளார்கள்.

English summary
pm modi marked , first 100 days with "development" and "big changes". he said, was done with the trust and support of the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X