சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாமல்லபுரத்தில் டங்கல் சினிமா பற்றி பெருமையாக பேசினார் சீனா அதிபர் ஜின்பிங்: ஹரியானாவில் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi - Xi Jinping Meet | மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பால் லாபம் யாருக்கு? | Oneindia Tamil

    சண்டிகர்: மாமல்லபுரத்தில் தம்மை சந்தித்த சீனா அதிபர் ஜின்பிங் டங்கல் சினிமா பற்றி பெருமையாக கூறினார் என ஹரியானா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.

    ஹரியானா சட்டசபைக்கான தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    ஹரியானாவுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக நான் வரவில்லை.நான் பாஜகவுக்கு பிரசாரம் செய்யவில்லை. உங்களின் வாக்குகளை கேட்டு நான் வரவில்லை. ஆனால் ஹரியானாவுக்கு நான் வருவதை என்னாலேயே தடுக்க முடியாது. நீங்கள் கொடுத்திருக்கும் அன்பு அப்படியானது.

    இம்முறை தாமரை தீபஅவளி

    இம்முறை தாமரை தீபஅவளி

    இந்த முறை 2 வகையான தீபாவளிகளை கொண்டாடப் போகிறோம். விளக்குகள் ஏற்றி கொண்டாடும் தீபாவளி ஒன்று. மற்றொன்று தாமரை தீபாவளி. இந்த வெற்றியை நமது சகோதர சகோதரிகளின் அயராத உழைப்புக்கு அர்ப்பணிப்போம்.

    வளர்ச்சிக்கு வாக்கு

    வளர்ச்சிக்கு வாக்கு

    நீங்கள் இந்த தேர்தலில் அளிக்கும் வாக்குகள் வளர்ச்சியையும் தேசத்தின் நலனையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். பிரிவினயை ஊக்கப்படுத்துகிற அரசியலை தோற்கடிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 100% ஆதரவு தந்தது ஹரியானாதான்.

    ஜின்பிங் கருத்து

    ஜின்பிங் கருத்து

    அண்மையில் சீனா அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது அவர் டங்கல் சினிமா பற்றி பெருமையாக பேசினார். ஹரியானா குறித்த சீனா அதிபரின் கருத்துகள் பெருமையாக இருந்தன.

    ஒட்டுமொத்த தேசமும் ஆதரவு

    ஒட்டுமொத்த தேசமும் ஆதரவு

    மத்திய அரசின் ஒரே ரேங்க் ஒரே பென்சன் திட்டத்தால் 19 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயனடைந்துள்ளனர். அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் ஜம்மு, காஷ்மீர், லடாக் பிராந்தியங்களுடன் ஒட்டுமொத்த தேசமே இணைந்து நிற்கிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள்தான் மத்திய அரசின் முடிவு தொடர்பாக விமர்சிக்கின்றனர்; பொய்யான வதந்திகளை பரப்புகின்றனர்.

    காங்கிரஸ் தலைவர்கள் கதறல்

    காங்கிரஸ் தலைவர்கள் கதறல்

    ஹரியானாவில் என்னுடைய வேட்பாளர் இவர்தான் என்கிற அத்தியாயம் மாற்றப்பட்டிருக்கிறது. சிறப்பாக செயல்படுகிறவர்கள்தான் முதல்வர் வேட்பாளராக முடியும் என்கிற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் ஊழல் மையமாக இருந்தது ஹரியானா. ஊழல்வாதிகளை பிடித்து சிறையில் தள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் இருப்பதால் அவர்கள் கதறுகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    English summary
    Prime minister Modi said that. We will have two types of Diwali this time. A diya Diwali, and a kamal Diwali.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X