சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

25 துண்டுகளாக வெட்டப்பட்ட பிசினஸ்மேன்.. உறைய வைத்த 2 கொலை.. கடைசியில் துப்பு துலக்கிய போலீஸ்!

ஹரியானாவில் நடந்த இரட்டை கொலையை போலீஸ் தற்போது துப்பி துலக்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானாவில் நடந்த இரட்டை கொலையை போலீஸ் தற்போது துப்பி துலக்கி இருக்கிறது.

ஹரியானாவின் குர்கிராமை சேர்ந்த தொழிலதிபர் ஜஸ்கரன் சிங் கடந்த 14ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதற்கு அடுத்து சில நாட்களில் அவரது பார்ட்னர் ஹார்னேக் சிங்கின் மனைவி குரேம்ஹார் கார் தூக்கி தொங்கினார்.

இந்த இரண்டு பேரும் எப்படி இறந்தனர் என்று போலீஸ் கண்டுபிடிக்க முடியாமல் திணறியது. தற்போது போலீஸ் கொலையாளியை கண்டுபிடித்துள்ளது.

என்ன கடன்

என்ன கடன்

ஹார்னேக் சிங் மற்றும் ஜஸ்கரன் சிங் இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள். இதில் ஜஸ்கரன் சிங்கிடம் ஹார்னேக் சிங் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பல மாதங்கள் முன் கடன் வாங்கிய இவர் ஜஸ்கரன் சிங்கிடம் அதை திருப்பி கொடுக்கவே இல்லை. இதனால் இவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது.

சேர்ந்து கொலை

சேர்ந்து கொலை

இந்த நிலையில் கடந்த 14ம் தேதி ஜஸ்கரன் சிங்கிடம் பணம் கொடுப்பதாக கூறிய ஹார்னேக் சிங் தன்னுடைய வீட்டிற்கு அவரை வரவழைத்து இருக்கிறார். அங்கேயே வைத்து ஹார்னேக் சிங், ஜஸ்கரன் சிங்கை கொலை செய்துள்ளார். ஹார்னேக் சிங்கின் மனைவி குரேம்ஹார் கார் மற்றும் அவர்களின் நண்பர் ஒருவரும் இந்த கொலைக்கு உதவி இருக்கிறார்கள். இவரை 25 துண்டுகளாக வெட்டி குப்பை கிடங்கில் போட்டுள்ளனர்.

இன்னொரு கொலை

இன்னொரு கொலை

இந்த நிலையில் குரேம்ஹார் கார் கடந்த 22ம் தேதி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். ஜஸ்கரன் சிங்கின் கொலையை போலீசிடம் தன் மனைவி சொல்லிவிடுவார் என்று பயந்து ஹார்னேக் சிங் அவரையும் கொன்றுள்ளார். ஆனால் இதை விசாரித்த போலீஸிடம் ஹார்னேக் சிங், அந்த வீட்டிற்கு வந்த திருடர்கள் குரேம்ஹார் காரை கழுத்தறுத்து கொன்றுவிட்டு பின் தூக்கில் தொங்க வைத்ததாக கூறியுள்ளார். தன் மனைவியை கொன்ற திருடர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அழுதுள்ளார்.

கண்டுபிடித்தனர்

கண்டுபிடித்தனர்

இந்த நிலையில் இந்த இரண்டு கொலையை செய்ததும் ஹார்னேக் சிங்தான் என்று போலீஸ் கண்டுபிடித்துள்ளனர். அந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் இருந்த பதிவுகள் காணாமல் போனதாக முதலில் கூறப்பட்டது. அதை போலீஸ் இப்போதுதான் கண்டுபிடித்துள்ளது. இதை வைத்து கொலையாளி ஹார்னேக் சிங்தான் என்று கண்டுபிடித்துள்ளனர். தற்போது ஹார்னேக் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
Police found the killer of 2 in Haryana with the help of CCTV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X