சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஞ்சாப்: 4 தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக, அகாலிதளத்தை வீழ்த்தி 3-ல் காங். அமோக வெற்றி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Punjab bypolls: Congress ahead in 3 seats | பஞ்சாப் இடைத் தேர்தலில் பட்டையை கிளப்பும் காங்கிரஸ்

    சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக மற்றும் சிரோமணி அகாலிதளத்தை வீழ்த்தி 3 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ்.

    பஞ்சாப் மாநிலத்தில் பஹ்வாரா, முகெரியன், டாகா மற்றும் ஜலாலாபாத் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பஹ்வாராவில் காங்கிரஸின் பல்வீந்தர்சிங் தாலிவார், முகெரியனில் இந்து பாலா, ஜலாலாபாத்தில் ரமீந்தர் சிங் ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    Punjab By Elections: Congress bags 3, SAD wins 1 seat

    பஹ்வாராவில் காங்கிரஸ் வேட்பாளர் பல்வீந்தர் சிங், பாஜக வேட்பாளர் ராஜேஷ் பாகாவை 26,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முகெரியனில் காங்கிரஸ் வேட்பாளர் இந்து பாலா, பாஜகவின் ஜாங்கிலால் மகாஜனை வீழ்த்தினார்.

    ஜலாலாபாத்தில் காங்கிரஸ் ரமீந்தர் சிங், அகாலிதளத்தின் ராஜ்சிங்கை 16,633 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜலாலாபாத் தொகுதி அகாலிதளத்தின் கோட்டையாக திகழ்ந்த பகுதி,

    மகாராஷ்டிரா ட்விஸ்ட்.. கிங் மேக்கரான சிவ சேனா.. முதல்வர் பதவிக்கு ஆசை! பாஜக என்னசெய்யும்?மகாராஷ்டிரா ட்விஸ்ட்.. கிங் மேக்கரான சிவ சேனா.. முதல்வர் பதவிக்கு ஆசை! பாஜக என்னசெய்யும்?

    டாகாவில் அகாலிதளத்தின் சிம்ரந்தீப் சிங்கிடம் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் சிங் சாந்து தோல்வியைத் தழுவினார். பஞ்சாப்பில் வலுவானதாக இருப்பதாக கூறப்படும் ஆம் ஆத்மி கட்சி, இந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மிக குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது.

    English summary
    In Punjab By Elections Congress won 3 seats and SAD won one Seat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X