சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரண்ட் பில் கட்டாததால் காவல் நிலையங்களின் பீஸை பிடுங்கிய மின்சார வாரியம்.. பஞ்சாபில் பரபரப்பு

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாமல் நீண்டகாலமாக நிலுவைத்தொகை வைத்திருந்த காரணத்தால் 10 முதல் 14 காவல் நிலையங்களில் மின் இணைப்பை அம்மாநில மின்சார வாரிய அதிகாரிகள் துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபில் காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அரசு கட்டிடங்கள் மின்சார வாரியத்திற்கு மின் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவை தொகை வைத்திருக்கின்றன.

 Punjab: Electricity supply disconnected at 10-14 police stations in Ludhiana by PSPCL over bill dues

இது தொடர்பாக பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் மின் கட்டணத்தை செலுத்தாத நிலையில், மின் இணைப்பை துண்டிக்க பஞ்சாப் மாநில மின்சார வாரியம் முடிவு செய்தது. இதன்படி லூதியனாவில் 10 முதல் 14 காவல் நிலையங்களின் மின் இணைப்பை நேற்று பஞ்சாப் மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அம்மாநில மின்சார வாரிய உயர் அதிகாரி டிபிஎஸ் கிரேவால் 51 அரசு துறை அலுவலகங்கள் 214 கோடி மின் கட்டணத்தை இதுவரை செலுத்தவில்லை. அதனால் தான் மக்களை பாதிக்காத வகையில் 10 முதல் 14 காவல் நிலையங்களின் மின்சாரத்தை துண்டித்தோம். மக்களை பாதிக்கும் என்பதால் நாங்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மின்சாரத்தை துண்டிக்கவில்லை. என்றார்.

English summary
Punjab: Electricity supply disconnected at 10-14 police stations in Ludhiana by Punjab State Power Corporation Limited (PSPCL) over bill dues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X