சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: பஞ்சாப்பில் மே 1 வரை லாக்டவுன் நீட்டிப்பு- முதல்வர் அமரீந்தர்சிங்

Google Oneindia Tamil News

சண்டிகர்: கொரோனா பரவுவதைத் தடுக்க தற்போது அமலில் இருக்கும் லாக்டவுனை மே 1-ந் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 3-வது வாரமாக லாக்டவுன் அமலில் இருக்கிறது. வரும் 14-ந் தேதியுடன் முடிவடையும் இந்த லாக்டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறதாகவே தெரிகிறது.

Punjab extends lockdown till May 1st

நாடாளுமன்ற அனைத்து கட்சித் தலைவர்களிடையே இது தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருக்கிறார். லாக்டவுன் நீட்டிப்பு தொடர்பாக நாளை அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

ஏற்கனவே லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ளன. ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கோ, ஏப்ரல் 30 வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என அறிவித்தும் விட்டார்.

யார் யாருக்கு கொரோனா பாதிப்பு... பெயர் உள்ளிட்ட முழு விவரங்களையும் பகிரங்கப்படுத்திய குஜராத் அரசு யார் யாருக்கு கொரோனா பாதிப்பு... பெயர் உள்ளிட்ட முழு விவரங்களையும் பகிரங்கப்படுத்திய குஜராத் அரசு

இதனை பின்பற்றி பஞ்சாப் மாநில அரசும் இன்றும் மே 1-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் இதனை முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்திருக்கிறார்.

மத்திய அரசு அறிவிக்கும் முன்னரே லாக்டவுனை நீட்டித்திருக்கும் 2-வது மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Punjab Govt today extended the lockdown in the state till May 1st.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X